ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு புதிய கட்டடம் கட்ட அடிக்கல்
வாணியம்பாடியை அடுத்த உதயேந்திரம் பேரூராட்சியில் இயங்கிவரும் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு ரூ. 50 லட்சம் மதிப்பில் கட்டப்பட உள்ள புதிய கட்டடத்துக்கான அடிக்கல் நாட்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
வாணியம்பாடியை அடுத்த உதயேந்திரம் பேரூராட்சியில் இயங்கிவரும் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு ரூ. 50 லட்சம் மதிப்பில் கட்டப்பட உள்ள புதிய கட்டடத்துக்கான அடிக்கல் நாட்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு அதிமுக பேரூராட்சி செயலாளர் பிச்சாண்டி தலைமை வகித்தார். மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர் ஜெயசக்தி, ஒன்றிய குழு உறுப்பினர் மணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். வாணியம்பாடி எம்எல்ஏ கோவி.சம்பத்குமார் அடிக்கல் நாட்டினார்.
பேரூர் கழக நிர்வாகிகள் ஏகாம்பரம், சரவணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.