FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

பள்ளியில் ரூ. 1.27 லட்சம் ரொக்கம் திருட்டு

திருவலம் அருகே தனியார் பள்ளியில் ரூ. 1.27 லட்சம் ரொக்கம் திருடுபோனது.ராணிப்பேட்டையை அடுத்த திருவலம் புதிய மேம்பாலம் அருகே தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது.

24 ஜனவரி 2024, 10:11 pm IST
பகிர்:

திருவலம் அருகே தனியார் பள்ளியில் ரூ. 1.27 லட்சம் ரொக்கம் திருடுபோனது.

ராணிப்பேட்டையை அடுத்த திருவலம் புதிய மேம்பாலம் அருகே தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது.

வியாழக்கிழமை காலை வழக்கம்போல் பள்ளியை திறக்க ஊழியர்கள் வந்தனர். அப்போது, அலுவலக அறையின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்தது தெரியவந்தது.

Advertisement

Advertisement

தகவலின்பேரில் தலைமை ஆசிரியர் பொய்யாமொழி பள்ளிக்கு வந்து அலுவலக அறைக்குள் சென்று பார்த்தார்.

உள்ளே பீரோவில் வைக்கப்பட்டிருந்த ரூ. 1.27 லட்சம் ரொக்கம் திருடு போயிருந்தது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின்பேரில், சிப்காட் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments