FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

பேர்ணாம்பட்டு வட்டத்தில் இணைக்க எதிர்ப்பு:19 கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் போராட்டம்

குடியாத்தம் வட்டத்தில் இருந்து பிரித்து பேர்ணாம்பட்டு வட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ள 19 கிராமங்களை, மீண்டும் குடியாத்தம் வட்டத்திலேயே தொடர வேண்டி அக்

24 ஜனவரி 2024, 10:11 pm IST
பகிர்:

குடியாத்தம் வட்டத்தில் இருந்து பிரித்து பேர்ணாம்பட்டு வட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ள 19 கிராமங்களை, மீண்டும் குடியாத்தம் வட்டத்திலேயே தொடர வேண்டி அக்

கிராமங்களைச் சேர்ந்த மக்கள் வெள்ளிக்கிழமை போராட்டம் நடத்தினர்.

குடியாத்தம் வட்டத்தில் இருந்த பேர்ணாம்பட்டை பிரித்து தனி வட்டமாக தமிழக அரசு அறிவித்தது. புதிய வட்டத்தின் தொடக்க விழா அண்மையில் நடைபெற்றது.

Advertisement

Advertisement

இதில், குடியாத்தம் வட்டாட்சியர் அலுவலகத்துக்கு அருகாமையில் உள்ள கூடநகரம், மேல்ஆலத்தூர், பட்டு, கொத்தகுப்பம், வளத்தூர், சிங்கல்பாடி, உள்ளி, ஒலக்காசி உள்ளிட்ட 19 வருவாய் கிராமங்கள் அடங்கிய வளத்தூர் உள்வட்டம் பேர்ணாம்பட்டு வட்டத்துடன் இணைக்கப்பட்டது.

சுமார் 20 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பேர்ணாம்பட்டுக்கு சென்று வர மிகவும் சிரமம் ஏற்படும் என்பதால் ஆரம்பம் முதலே இதற்கு இக்கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். போராட்டங்களையும் நடத்தினர். இவை பலனளிக்கவில்லை.

தொடர்ந்து, 19 கிராமங்களும் பேர்ணாம்பட்டு வட்டத்தில் இணைக்கப்பட்டு, புதிய வட்டம் தொடங்கப்பட்டது.

இந்நிலையில், வளத்தூர் உள்வட்டத்தை மீண்டும் குடியாத்தம் வட்டத்தில் இணைக்க வலியுறுத்தி 19 கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் சுமார் 1,000 பேர் வெள்ளிக்கிழமை போராட்டங்களை நடத்தினர்.

முன்னதாக, இவர்கள் நேதாஜி சௌக்கிலிருந்து ஊர்வலமாக வந்து வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

அவர்களை வட்டாட்சியர் கே.விஜயன் சமரசம் செய்ய முயன்றார். அது பலனளிக்கவில்லை. இதையடுத்து, அவர்கள் அனைவரும் வட்டாட்சியர் அலுவலகம் எதிரே உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கோரிக்கை ஏற்கப்படாவிட்டால், குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டைகளை அரசிடம் ஒப்படைத்து விடுவதாகவும், வரும் தேர்தலை புறக்கணிப்பதாகவும் அவர்கள் கூறினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments