FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்ட விவசாயிகள்

சீரான மின்சாரம் விநியோகம் செய்யப்படாததால் ஆத்திரமடைந்த விவசாயிகள் மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

24 ஜனவரி 2024, 10:11 pm IST
பகிர்:

சீரான மின்சாரம் விநியோகம் செய்யப்படாததால் ஆத்திரமடைந்த விவசாயிகள் மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நாட்டறம்பள்ளியை அடுத்த மல்லகுண்டா, கத்தாரி ஊராட்சிகளில் 30-க்கும் அதிகமான குக்கிராமங்கள் உள்ளன. இங்கு பல ஆயிரம் ஏக்கர் விளை நிலங்களும் 100-க்கும் அதிகமான நீரேற்று மின்மோட்டார்களும் உள்ளன.

இந்தப் பகுதிகளில் உள்ள குடியிருப்புகளுக்கும், விவசாய தேவைகளுக்கும் நாட்டறம்பள்ளி துணை மின் நிலையத்திலிருந்து மின்சாரம் விநியோகிக்கப்படுகிறது.

Advertisement

Advertisement

இந்நிலையில் கடந்த சில மாதங்களாக குறைந்த அழுத்த மின் விநியோகம் காரணமாக மின்மோட்டார்கள் சரிவர இயங்கவில்லை. இப்பிரச்னை குறித்து விவசாயிகள் பலமுறை மின் வாரிய அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்கின்றனர்.

இதனால், ஆத்திரமடைந்த 25-க்கும் மேற்பட்ட விவசாயிகள் வெள்ளிக்கிழமை காலை நாட்டறம்பள்ளி மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு சீரான மின்சாரம் வழங்கக் கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து, மின்வாரிய அதிகாரிகள் ஓரிரு நாளில் சீரான மின்சாரம் கிடைக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறியதை ஏற்று விவசாயிகள் கலைந்து சென்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments