FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
வேலூர்

நெல், அரிசி  வியாபாரிகள் சங்க  செயற்குழுக் கூட்டம்

குடியாத்தம் நகர நெல், அரிசி வியாபாரிகள் சங்க செயற்குழுக் கூட்டம் தரணம்பேட்டையில் உள்ள சங்க அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.

Updated On : 3 ஆகஸ்ட் 2018, 1:42 am IST
பகிர்:

குடியாத்தம் நகர நெல், அரிசி வியாபாரிகள் சங்க செயற்குழுக் கூட்டம் தரணம்பேட்டையில் உள்ள சங்க அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு, சங்கத் தலைவர் என்.இ. கிருஷ்ணன் தலைமை வகித்தார். செயலர் டி. ராஜேந்திரன், நிர்வாகிகள் ஆர்.லிங்கப்பா, மாரிசிவகுமார், ஆர்.கோபி, எஸ்.அன்பு, எம்.ஜீவா, வி.பூபதி, பி.கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோர் ஆகியோர் கலந்துகொண்டனர். 
ஒட்டுமொத்த வணிகர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் வகையில் உள்ள ஜிஎஸ்டி, உணவுப் பாதுகாப்பு தர நிர்ணய சட்டத்தை மாற்றியமைக்க வேண்டும். தமிழக அரசு உயர்த்தியுள்ள சொத்து வரியை ரத்து செய்துவிட்டு, பழைய வரியையே வசூலிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments