FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3 ஆம் இடம்... ஆளுநர் ஆர்லேகருக்கு தவெக கண்டனம்!

தமிழ்த்தாய் வாழ்த்து 3 ஆம் இடத்தில் பாடப்பட்டது தொடர்பாக ஆளுநர் ஆர்லேகருக்கு தவெக கண்டனம் தெரிவித்துள்ளதைப் பற்றி...

முதல்வர் விஜய் - ஆளுநர் ஆர்.வி. ஆர்லேகர்.
பகிர்:

நெல்லை மனோன்மணியம் பெ. சுந்தரனார் பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து 3 ஆம் இடத்தில் பாடப்பட்டது தொடர்பாக ஆளுநர் ஆர்.வி. ஆர்லேகருக்கு தமிழக வெற்றிக் கழகம் கண்டனம் தெரிவித்துள்ளது.

திருநெல்வேலியில் உள்ள மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் 33-வது பட்டமளிப்பு விழா இன்று (ஜூலை 28) பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள வ.உ. சிதம்பரனார் கலையரங்கில் நடைபெற்றது.

இந்த விழாவுக்கு தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் ஆர்லேகர் தலைமை தாங்கி, மாணவ-மாணவிகளுக்கு பட்டங்களையும் தங்கப் பதக்கங்களை வழங்கினார்.

Advertisement

Advertisement

இந்த நிகழ்ச்சியில் முதலில் வந்தே மாதரம், இரண்டாவதாக தேசிய கீதம் பாடப்பட்டு மூன்றாவதாகவே தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது.

இந்த விவகாரம் மாநில அளவில் பெரும் விவாதமான நிலையில், எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், இதுதொடர்பாக தமிழக வெற்றிக் கழகம் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளது.

அந்தப் பதிவில், “நமது மனசாட்சி உள்ள மக்களாட்சியில் யார் தடுத்தாலும் தாய்த் தமிழுக்கு முதலிடமே இருக்கும். எம் தாய்மொழியை மூன்றாம் இடத்திற்குத் தள்ளுவதை ஒருபோதும் சகித்துக்கொள்ள மாட்டோம்.

அதற்குக் காரணமாக மத்திய பா.ஜ.க. அரசாக இருந்தாலும் சரி அல்லது ஆளுநராக இருந்தாலும் சரி கடுமையான கண்டனங்களைப் பதிவு செய்கிறோம். எங்கள் நிலத்தில் எங்கள் மொழிக்கே முன்னுரிமை. இதை உறுதியாக நாம் நிலைநாட்டுவோம். சட்ட முன்னெடுப்புத் தேவை எனில், அதற்கும் தயாராகவே இருக்கிறோம்” எனப் பதிவிட்டுள்ளது.

summary

Tamizhaga Vettri Kazhagam has condemned Governor R.V. Arlekar regarding the fact that the 'Tamil Thai Vazhthu' was sung third in the order of proceedings at the convocation ceremony of Manonmaniam Sundaranar University in Nellai.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments