FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
வேலூர்

போலி மதுபான தொழிற்சாலை: மது பாட்டில்கள், இயந்திரங்கள் பறிமுதல்

வாணியம்பாடி அருகே எரிசாராயம் கொண்டு போலி மதுபாட்டில்கள் தயாரிக்கும் தொழிற்சாலை கண்டுபிடிக்கப்பட்டது.

Updated On : 3 ஆகஸ்ட் 2018, 1:43 am IST
பகிர்:

வாணியம்பாடி அருகே எரிசாராயம் கொண்டு போலி மதுபாட்டில்கள் தயாரிக்கும் தொழிற்சாலை கண்டுபிடிக்கப்பட்டது. இதுதொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டார்.
வாணியம்பாடியை அடுத்த நிம்மியம்பட்டு அருகே உள்ள கூவல்குட்டை என்ற மலைப்பகுதியில் போலி மதுபானங்கள் தயாரிக்கப்பட்டு வருவதாக எஸ்.பி. அலுவலகத்துக்கு கிடைத்த தகவலின் பேரில்  வாணியம்பாடி மதுவிலக்கு போலீஸார் மற்றும்  தனிப்படை போலீஸார் கூவல்குட்டை பகுதியில்  புதன்கிழமை சோதனை நடத்தினர். அப்போது தனியே இருந்த ஒரு வீட்டில் நடத்திய சோதனையில், அங்கு ஸ்பிரிட் (எரிசாராயம்) கொண்டு போலி மதுபாட்டில்கள் தயாரிப்பதற்கான இயந்திரங்கள், ஆயிரத்துக்கும் மேற்பட்ட  காலி மதுபாட்டில்கள் மற்றும்  தயாரிக்கப்பட்டு விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த 100-க்கும் மேற்பட்ட மதுபாட்டில்கள், எரிசாராய கேன்கள் ஆகியவற்றை போலீஸார் பறிமுதல்  செய்தனர். 
மேலும், மதுபானத்தை தயாரித்த வெள்ளகுட்டை பகுதியைச் சேர்ந்த சங்கரை (40) போலீஸார் கைது விசாரித்து வருகின்றனர். மேலும், அங்கிருந்து தப்பியோடிய 5-க்கும் மேற்பட்டோரைத் தேடி வருகின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments