இந்து முன்னணியினர் மொட்டையடித்து மனு
கடந்த 60 ஆண்டுகளாக தமிழக கோயில்களில் நடைபெறும் சிலை திருட்டு சம்பவங்களைக் கண்டுகொள்ளாத மாநில அரசு, காவல் துறையைக்
கடந்த 60 ஆண்டுகளாக தமிழக கோயில்களில் நடைபெறும் சிலை திருட்டு சம்பவங்களைக் கண்டுகொள்ளாத மாநில அரசு, காவல் துறையைக் கண்டித்து இந்து முன்னணியினர் ஞாயிற்றுக்கிழமை மொட்டையடித்து, கோயில் உண்டியலில் மனு போட்டனர்.
திருடு போன சிலைகளை சிவபெருமானே கண்டுபிடித்து குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்க வேண்டியும், சிலை கடத்தல் தடுப்புப் பிரிவுக்கு ஐ.ஜி.யாக பொன். மாணிக்கவேலை தொடர்ந்து பணியாற்ற உத்தரவிட வேண்டியும் அவர்கள் நெல்லூர்பேட்டை கருப்புலீஸ்வரர் கோயில் வளாகத்தில் மொட்டையடித்து, கோயில் உண்டியலில் மனு போட்டனர்.
இதைத் தொடர்ந்து சந்தப்பேட்டை சீதாராம ஆஞ்ச
நேயர் கோயில் உண்டியலிலும், தரணம்பேட்டை முத்தியாலம்மன் கோயில் உண்டியலிலும் கோரிக்கை தொடர்பான மனுக்களைப் போட்டனர்.
இதில், அமைப்பின் மாவட்டச் செயலர் ஆதிசிவா, ஒன்றியத் தலைவர் தரணி, ஒன்றியச் செயலர் யோகானந்தம், ஜெயசூரியா, ஆனந்தன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.