FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
வேலூர்

தென்பெண்ணை-பாலாறு இணைப்புத் திட்டம்: அக்.3-இல் நடைபயணம்

தென்பெண்ணை-பாலாறு நதிகள் இணைப்புத் திட்டத்தின் முக்கியத்துவம் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக

Updated On : 20 ஆகஸ்ட் 2018, 6:11 am IST
பகிர்:

தென்பெண்ணை-பாலாறு நதிகள் இணைப்புத் திட்டத்தின் முக்கியத்துவம் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக அக்டோபர் 3-ஆம் தேதி வேலூர் மாவட்டத்தில் இருவேறு இடங்களில் இருந்து நடைபயணம் தொடங்க பாலாறு பாதுகாப்பு விழிப்புணர்வு இயக்கம் முடிவு செய்துள்ளது.
இந்த இயக்கத்தின் சார்பில் தென்பெண்ணை-பாலாறு இணைப்புத் திட்டத்தை தமிழக அரசு உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தி ஆலோசனைக் கூட்டம் வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கக் கட்டடத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இயக்கத்தின் அமைப்பாளர் ச.ந.ச.மார்த்தாண்டன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் பல்வேறு விவசாய சங்க நிர்வாகிகள், சமூக ஆர்வலர்கள் பங்கேற்றனர். 
இந்தக் கூட்டத்தில், தென்பெண்ணை-பாலாறு இணைப்புத் திட்டத்தின் முக்கியத்துவம் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக வேலூர் மாவட்டத்தில் இரு குழுக்களாக பிரிந்து நடைபயணம் நடத்துவதென முடிவு செய்யப்பட்டது. 
இதன்படி, ஒரு குழு வெள்ளக்கல்நத்தம் பகுதியில் இருந்தும், மற்றொரு குழு பெரும்புலிப்பாக்கம் பகுதியில் இருந்தும் அக்டோபர் 3-ஆம் தேதி நடைப்பயணத்தைத் தொடங்கப்படுகிறது. வழியில் ஆங்காங்கே பொதுக்கூட்டங்கள் நடத்தியும், துண்டுப் பிரசுரங்களை விநியோகித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். இவ்விரு குழுக்களும் அக்டோபர் 7-ஆம் தேதி சத்துவாச்சாரி ஆர்.டி.ஓ சாலையில் இணைந்து பொதுக்கூட்டம் நடத்திவிட்டு மறுநாள் ஆட்சியரிடம் மனு அளிக்கப்படும். இந்த நடைபயணத்தில் பொதுமக்களை பெருமளவில் பங்கேற்கச் செய்யவும் தீர்மானிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments