தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
பொது வேலை நிறுத்தப் போராட்டத்தை விளக்கி தொழிற்சங்கங்கள் சார்பில் ஆம்பூர் வருவாய் துறை கிராம சாவடி எதிரில் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பொது வேலை நிறுத்தப் போராட்டத்தை விளக்கி தொழிற்சங்கங்கள் சார்பில் ஆம்பூர் வருவாய் துறை கிராம சாவடி எதிரில் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் உள்ளிட்ட12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஏஐடியுசி, ஐஎன்டியுசி, சிஐடியு, எல்பிஎப், ஹெச்எம்எஸ் உள்ளிட்ட 11 மத்திய தொழிற்சங்கங்கள் சார்பில் 2019-ஆம் ஆண்டு ஜனவரி 8, 9 ஆகிய நாள்களில் 48 மணி நேரம் பொது வேலை நிறுத்த போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது. அந்த வேலை நிறுத்தப் போராட்டத்தை விளக்கி ஆம்பூரில் அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு தொழிற்சங்க நிர்வாகிகள் கே.எஸ். ஹசேன், வ. அருள்சீனிவாசன், எம்.ஞானதாஸ், கே. பெருமாள் ஆகியோர் தலைமை வகித்தனர்.
ஏஐடியுசி மாநில துணைத் தலைவர் எஸ்.ஆர். தேவதாஸ், ஐஎன்டியுசி மாவட்டத் தலைவர் ஆர். கோவிந்தசாமி, சிஐடியு மாவட்டச் செயலர் எம்.பி.ராமச்சந்திரன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
இதில் தொழிற்சங்க நிர்வாகிகள், தொழிலாளர்கள் பங்கேற்றனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.