FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

பொது வழித்தட ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி சார்-ஆட்சியர் அலுவலகம் முற்றுகை

ராணிப்பேட்டை அருகே பொது வழித்தடத்தை தனி நபர் ஆக்கிரமிப்பு செய்துள்ளதை அகற்றி சாலை வசதியை ஏ

30 ஜனவரி 2024, 11:25 pm IST
பகிர்:

ராணிப்பேட்டை அருகே பொது வழித்தடத்தை தனி நபர் ஆக்கிரமிப்பு செய்துள்ளதை அகற்றி சாலை வசதியை ஏற்படுத்தித் தரக் கோரி குடியிருப்பு வாசிகள் 50-க்கும் மேற்பட்டோர் ராணிப்பேட்டை சார்-ஆட்சியர் அலுவலகத்தை புதன்கிழமை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து சார்-ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர். 
புகார் மனு விவரம்: ராணிப்பேட்டையை அடுத்த பெல் நரசிங்கபுரம் ஊராட்சிக்கு உள்பட்ட தென்றல் நகர் பகுதியில் 500-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகிறோம். 
எங்கள் குடியிருப்புப் பகுதிக்கென சீக்கராஜபுரம் ஊராட்சியில் வாலாஜாபேட்டை ஊராட்சி ஒன்றிய ஆணையரால் கடந்த 1983-ஆம் ஆண்டு பொது வழித்தடத்துக்கென வரைபட அங்கீகாரம் செய்யப்பட்டுள்ளது. 
தற்போது இந்த பொது வழித்தடத்தை தனி நபர் ஒருவர் ஆக்கிரமிப்பு செய்து, முள்வேலி அமைத்துள்ளனர். இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலரிடம் புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. 
இதனால் தங்கள் குடியிருப்புப் பகுதிக்குள் அவசர காலங்களில் தீயணைப்பு, ஆம்புலன்ஸ் உள்ளிட்ட வாகனங்கள் வந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. 
எனவே ஊராட்சி ஒன்றிய ஆணையரின் அங்கீகாரம் பெற்ற பொது வழித்தடத்தை தனி நபரிடம் இருந்து மீட்டு தங்கள் குடியிருப்புப் பகுதிக்கு சாலை வசதி ஏற்படுத்தித் தர வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments