ஆபத்தான நிலையில் விளம்பரப் பலகை: வாகன ஓட்டிகள் அச்சம்
திருப்பத்தூர் பிரதான சாலையில் போக்குவரத்து சிக்னல் கம்பத்தில் அமைக்கப்பட்டுள்ள விளம்பரப் பலகை அபாயகரமான நிலையில் உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் செல்கின்றனர்.
திருப்பத்தூர் பிரதான சாலையில் போக்குவரத்து சிக்னல் கம்பத்தில் அமைக்கப்பட்டுள்ள விளம்பரப் பலகை அபாயகரமான நிலையில் உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் செல்கின்றனர்.
திருப்பத்தூரில், திருப்பத்தூர்-கிருஷ்ணகிரி பிரதான சாலை மிகவும் குறுகலாக உள்ளது. இந்த வழியாக தருமபுரி, சேலம், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளுக்கு பேருந்துகள், லாரிகள் என நூற்றுக்கணக்கான கனரக வாகனங்கள் செல்கின்றன. இந்த பிரதான சாலையில் போக்குவரத்து சிக்னல் கம்பங்கள் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்டன. ஆனால், அவை இதுவரை முழுமையாகச் செயல்படவில்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். மேலும், பாதாள சாக்கடை திட்டப் பணிக்காக தோண்டப்பட்ட சாலைகள் மீண்டும் அமைக்கப்பட்டன. இச்சாலைகளும் குறுகிய காலத்திலேயே சேதமடைந்தன. இதனால், வாகன ஓட்டிகள் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர்.
திருப்பத்தூர்-கிருஷ்ணகிரி பிரதான சாலையில் உள்ள தனியார் உணவகம் முன் உள்ள போக்குவரத்து சிக்னல் கம்பத்தில், தனியார் நிறுவனத்தின் விளம்பரப் பலகை அமைக்கப்பட்டுள்ளது. இந்த விளம்பரப் பலகை கடந்த சில நாள்களுக்கு முன் வீசிய சூறாவளிக் காற்றால் சாய்ந்து விழும் நிலையில் உள்ளது. எந்நேரத்திலும் இந்த விளம்பரப் பலகை சாலையில் விழும் என்பதால் வாகன ஓட்டிகள் அச்சத்துடனே செல்கின்றனர்.
எனவே, விபத்து ஏற்படும் முன் போக்குவரத்துத் துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.