திமுகவை வழிநடத்த யாருக்குத் தகுதி உள்ளது? உதயநிதியா? கனிமொழியா? நிர்மல் குமார் கேள்வி
திமுகவை வழிநடத்த கனிமொழிக்கு தகுதி உள்ளதா? உதயநிதிக்கு தகுதி உள்ளதா? என அமைச்சர் நிர்மல் குமார் கேள்வி எழுப்பியது குறித்து...
திமுகவை வழிநடத்த கட்சிக்குள்ளேயே வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என தவெக அமைச்சர் நிர்மல் குமார் கூறியுள்ளார்.
திருச்சியில் செய்தியாளர்களுடன் அமைச்சர் நிர்மல் குமார் பேசியதாவது, "நாடு முழுவதும் இளைஞர்களின் போராட்டம் நடந்து வருகிறது. இங்கும் நீட் தேர்வை சீரமைக்க வேண்டும் என்று ஒரு சிலரும், நீட் தேர்வே வேண்டாம் என்று ஒரு சிலரும் போராட்டம் நடத்துகின்றனர்.
இதனிடையே, திமுகவின் தேவையில்லாத வேலையைப் பார்த்து வருகின்றனர். ஜென் ஸீ திமுக என்ற டீ-சர்ட்டை அணிந்துகொண்டு, ரூ. 200 கொடுத்து போராட்டக்காரர்களுக்கு மத்தியில் ஒரு சிலரை உதயநிதியோ யாரோ அனுப்புகின்றனர்.
Advertisement
Advertisement
உதயநிதியை யாரோ தவறாக வழிநடத்துகின்றனர். முதலில் ஜென் ஸீ என்றால் என்ன? என்பதை உதயநிதிக்கு யாரேனும் சொல்லி புரிய வைக்க வேண்டும்.
இந்த மாதிரியான கோமாளித்தனமான வேலைகளை விட்டுவிட்டு, ஆக்கபூர்வமான வேலைகளை உதயநிதி செய்ய வேண்டும். முதலில் அவருக்கு ஒரு சுய பரிசோதனை வேண்டும்.
அவரது தந்தை இருந்தபோது, யார் தலைவர் என்றே தெரியாமல், திராவிட மாடல் ஆட்சி என்று சொல்லி முடித்துவிட்டுச் சென்று விட்டார். அவர் இருந்தவரையில், கடைசி வரைக்கும் அவருடைய அரசு என்றே அவர் சொல்லவில்லை. உதயநிதிக்கும் அதே சந்தேகம்தான். அதனால்தான் ஜென் ஸீ திமுக என ஏதோ வேலைபார்த்துக் கொண்டிருக்கிறார்.
திமுகவை வழிநடத்துவதற்கு உதயநிதிக்கு தகுதி உள்ளதா? அல்லது கனிமொழிக்கு தகுதி உள்ளதா? என அவர்களின் கட்சியினரிடம் ஒரு வாக்கெடுப்பு நடத்தச் சொல்வோம். அந்த வாக்கெடுப்பின் முடிவுகளைக்கூட உதயநிதி வெளியில் சொல்ல வேண்டாம். ஏனெனில், அவரின் தகுதியை அவர்களின் கட்சியினருக்கே தெரியும்" என்று தெரிவித்தார்.
Minister Nirmal Kumar questions whether Kanimozhi or Udhayanidhi has the credentials to lead the DMK
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.