சீனு ராமசாமியின் இடிமுழக்கம் திரைப்படத்தின் இரண்டு பாடல்கள்! வெளியீடு எப்போது?
இடிமுழக்கம் திரைப்படத்தின் 2 பாடல்களைப் பகிர்ந்த இயக்குநர் சீனு ராமசாமி...
நடிகர் ஜிவி பிரகாஷ்குமார் நடிப்பில் உருவான இடிமுழக்கம் திரைப்படத்தின் 2 பாடல்களை இயக்குநர் பகிர்ந்துள்ளார்.
ஸ்கைமேன் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் கலைமகன் முபாரக் வழங்கும் இயக்குநர் சீனு ராமசாமி இயக்கத்தில், ஜிவி பிரகாஷ் குமார் நடிப்பில் உருவாகியுள்ள ’இடிமுழக்கம்’ படத்தின் 'கானா விளக்கு மயிலே...' மற்றும் 'அடி தேனி சந்தையில்...' ஆகிய இரண்டு குத்துப்பாடல்களின் லிரிக்கல் வீடியோவை இயக்குநர் சீனு ராமசாமி பகிர்ந்துள்ளார்.
வைரமுத்து எழுதியுள்ள கானா விளக்கு மயிலே’ என்கிற நாட்டுப்புறப் பாடலை ஆண்டனி தாசன் பாடியுள்ளார். என்.ஆர். ரகுநந்தன் இசையமைத்துள்ளார். மற்றொரு பாடலான 'அடி தேனி சந்தையில்...' பாடலை லா. வரதன் எழுதியிருக்க ஆண்டனி தாசன் மற்றும் மீனாட்சி இளையராஜா பாடியுள்ளனர்.
Advertisement
Advertisement
’இடிமுழக்கம்’ திரைப்படம் தென் மாவட்டங்களை மையப்படுத்திய பழிவாங்கும் ஆக்ஷன் த்ரில்லர் கதை. இந்த படத்தில் ஜிவி பிரகாஷ் குமார் இறைச்சிக் கடை உரிமையாளராகவும், நடிகை காயத்ரி சங்கர் ஒரு செவிலியராகவும் நடித்துள்ளனர். விரைவில் இப்படம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
Two songs from the film Idimuzhakkam, starring actor G.V. Prakash Kumar, have been released.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.