ரயிலில் அபாயச் சங்கிலியை இழுத்த இளைஞர் கைது
ஜோலார்பேட்டை அருகே ரயிலில் அபாயச் சங்கிலியைப் பிடித்து இழுத்த இளைஞர் கைது செய்யப்பட்டார்.
ஜோலார்பேட்டை அருகே ரயிலில் அபாயச் சங்கிலியைப் பிடித்து இழுத்த இளைஞர் கைது செய்யப்பட்டார்.
சென்னையில் இருந்து மங்களூரு செல்லும் விரைவு ரயில் செவ்வாய்க்கிழமை இரவு பார்சம்பேட்டை ரயில்வே கேட் அருகே வந்து கொண்டிருந்தது.
அப்போது, திடீரென ரயில் நின்றது. டிக்கெட் பரிசோதகர் கிஷோர் மற்றும் என்ஜின் ஓட்டுநர் கண்ணன் ஆகியோர் விசாரித்ததில், முன்பதிவு செய்யப்பட்ட பெட்டியில் பயணம் செய்த திருச்சியைச் சேர்ந்த மாதவன் (35) அபாயச் சங்கிலியை இழுத்தது தெரியவந்தது.
இவர், சென்னையில் இருந்து சாதாராண டிக்கெட் எடுத்து, முன்பதிவு செய்யப்பட்ட பெட்டியில் பயணம் செய்துள்ளார்.
அப்போது சக பயணிடம் ஏற்பட்ட தகராறு காரணமாக அபாயச் சங்கிலி இழுத்துள்ளார். இதையடுத்து ஜோலார்பேட்டை ரயில்வே போலீஸார் மாதவனை கைது செய்தனர்.
பின்னர், ரயிலை இயக்கியபோது என்ஜின் பழுதானது. பழுது சரி செய்யப்பட்டு, சுமார் 1 மணி நேரம் தாமதத்துக்குப் பின் ரயில் புறப்பட்டது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.