ஒரே வாகனத்தில் 5 பேர்: சாகச பயணம் மேற்கொண்ட மாணவர்களைத் தேடும் காவல்துறை
வேலூரில் சாலையில் பள்ளி மாணவர்கள் இரு சக்கர வாகனத்தில் மேற்கொண்ட சாகச பயணத்தின் விடியோ காண்போரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
வேலூரில் சாலையில் பள்ளி மாணவர்கள் இரு சக்கர வாகனத்தில் மேற்கொண்ட சாகச பயணத்தின் விடியோ காண்போரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
சமீப நாள்களில் சாலையில் இளைஞர்கள் சாகச பயணங்களை மேற்கொள்ளும் விடியோக்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன. தற்போது அதைவிட அதிர்ச்சி தரும் சம்பவம் வேலூரில் நடந்துள்ளது விடியோ மூலம் தெரியவந்துள்ளது.
இதையும் படிக்க | தில்லியில் 66 ஆண்டுகள் இல்லாத அளவு மழைப்பொழிவு பதிவு
Advertisement
Advertisement
வேலூரில் சாலையில் இருசக்கர வாகனத்தில் செல்லும் பள்ளி மாணவர்கள் ஒருவர் மீது ஒருவர் என 5 பேர் அமர்ந்து செல்லும் காட்சிகள் அடங்கிய விடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
வேலூரை அடுத்த அப்துல்லாபுரம் பகுதி தேசிய நெடுஞ்சாலையில் நடந்த இந்த சம்பவத்தை அந்த வழியாக சென்ற ஒருவர் விடியோ எடுத்து பதிவிட்டுள்ளார்.
இந்நிலையில் விடியோவில் பதிவாகியுள்ள வாகன எண்ணை வைத்து விரிஞ்சிபுரம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆபத்தை உணராமல் மாணவர்கள் இவ்வாறு சாலையில் பயணம் செய்வதைத் தடுக்க காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.