தந்தையின் குடிப்பழக்கத்தை கைவிட கடிதம் எழுதி தற்கொலை செய்து கொண்ட மகள்!
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த சின்னராஜாகுப்பம் கிராமத்தை சேர்ந்தவர் பிரபு.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த சின்னராஜாகுப்பம் கிராமத்தை சேர்ந்தவர் பிரபு. கூலித் தொழிலாளரான இவருக்கு குடிபழக்கம் இருந்துள்ளது. இவரது மகள் விஷ்ணு பிரியா (16) குடியாத்தம் நெல்லூர்பேட்டை பகுதியில் உள்ள அரசு நிதி உதவி பள்ளியில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் சுமார் 410 மதிப்பெண் பெற்றுள்ளார்.
இந்நிலையில், விஷ்ணு பிரியா தந்தையின் குடிப்பழக்கத்தால் வீட்டில் அவ்வப்போது சண்டை காரணமாக அவர் மனவருத்தியில் இருந்து உள்ளார்.
அதில், மன வேதனை அடைந்த விஷ்ணு பிரியா நேற்று மாலை கடிதம் எழுதி வைத்து அவரது வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
Advertisement
Advertisement
அந்த கடிதத்தில் எனது சாவுக்கு யாரும் காரணம் இல்லை எனது தந்தை குடிப்பழக்கத்தை நிறுத்தி விட வேண்டும் , எனது குடும்பம் எப்பொழுது மகிழ்ச்சியாக இருக்கின்றதோ அப்போதுதான் எனது ஆத்மா சாந்தி அடையும் என கடிதம் எழுதி வைத்துள்ளார்.
இது குறித்து தகவல் அறிந்த குடியாத்தம் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து இது குறித்து வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.