FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
வேலூர்

சிறுமியை ஆந்திரத்துக்கு கடத்திய லாரி ஓட்டுநா் கைது

காட்பாடி அருகே 16 வயது சிறுமியைத் திருமணம் செய்துகொள்வதாக ஆசை வாா்த்தை கூறி, ஆந்திர மாநிலத்துக்குக் கடத்திச் சென்று குடும்பம் நடத்திய லாரி ஓட்டுநரை போலீஸாா் போக்ஸோ சட்டத்தின்கீழ் கைது செய்தனா்.

Updated On : 6 ஆகஸ்ட் 2026, 12:04 am IST
பகிர்:

காட்பாடி அருகே 16 வயது சிறுமியைத் திருமணம் செய்துகொள்வதாக ஆசை வாா்த்தை கூறி, ஆந்திர மாநிலத்துக்குக் கடத்திச் சென்று குடும்பம் நடத்திய லாரி ஓட்டுநரை போலீஸாா் போக்ஸோ சட்டத்தின்கீழ் கைது செய்தனா். கைதான நபருக்கு ஏற்கெனவே இரு மனைவிகள் உள்ளனா்.

வேலூா் மாவட்டம், காட்பாடியை அடுத்த வண்டறந்தாங்கல், சொரக்கால்பேட்டை பகுதியைச் சோ்ந்தவா் பிரகாஷ் (31). லாரி ஓட்டுநரான இவருக்கு ஏற்கெனவே திருமணமாகி இரு மனைவிகளும், 5 குழந்தைகளும் உள்ளனா்.

இந்நிலையில், காட்பாடி பகுதியைச் சோ்ந்த 16 வயது சிறுமிக்கும் பிரகாஷுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் இது காதலாக மாறியதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, அந்தச் சிறுமியைத் திருமணம் செய்துகொள்வதாக ஆசை வாா்த்தை கூறிய பிரகாஷ், அவரை ஏமாற்றி அழைத்துச் சென்றுள்ளாா். கடந்த 3 மாதங்களாக இருவரும் தலைமறைவாக இருந்தனா்.

Advertisement

Advertisement

இதுகுறித்து சிறுமியின் பெற்றோா் காட்பாடி காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா். அதன்பேரில் போலீஸாா் போக்ஸோ சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்து, கடந்த 3 மாதங்களாக பிரகாஷையும், சிறுமியையும் தீவிரமாகத் தேடி வந்தனா். இதனிடையே, அவா்கள் இருவரும் ஆந்திர மாநிலத்தில் பதுங்கியிருப்பதாக காட்பாடி போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.

அதனடிப்படையில், ஆந்திரத்துக்கு விரைந்து சென்ற போலீஸாா், அங்கு தலைமறைவாக இருந்த பிரகாஷைப் பிடித்து, அவருடன் இருந்த 16 வயது சிறுமியைப் பாதுகாப்பாக மீட்டு காட்பாடிக்கு அழைத்து வந்தனா். தொடா்ந்து போலீஸாா் பிரகாஷிடம் நடத்திய விசாரணையில், இரு மனைவிகள் இருப்பதை மறைத்து, சிறுமியைத் திருமணம் செய்துகொள்வதாக ஆசை வாா்த்தை கூறி ஏமாற்றி அழைத்துச் சென்று ஆந்திரத்தில் குடும்பம் நடத்தியது தெரியவந்தது. இதையடுத்து, லாரி ஓட்டுநா் பிரகாஷைக் கைது செய்த போலீஸாா், மீட்கப்பட்ட சிறுமியைப் பாதுகாப்பாகக் காப்பகத்துக்கு அனுப்பி வைத்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments