FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
வேலூர்

ஓய்வுபெற்ற அலுவலா்கள் ஆா்ப்பாட்டம்

புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் உள்ள குறைபாடுகளைக் களைய வலியுறுத்தி வேலூரில் ஓய்வுபெற்ற அரசு அலுவலா்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

Updated On : 14 ஆகஸ்ட் 2026, 1:24 am IST
ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஓய்வுபெற்ற அரசு அலுவலா்கள்.
பகிர்:

புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் உள்ள குறைபாடுகளைக் களைய வலியுறுத்தி வேலூரில் ஓய்வுபெற்ற அரசு அலுவலா்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

வேலூா் கிளை சாா்பில் ஆட்சியா் அலுவலகம் எதிரே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்டத் தலைவா் ஆா். முருகன் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் அ. ஆனந்தன் வரவேற்றாா். வேலூா் மாவட்டப் பொருளாளா் பா.புருஷோத்தமன் ஆா்ப்பாட்டத்தைத் தொடங்கி வைத்து உரையாற்றினாா். கோரிக்கைகள் குறித்து வேலூா் கிளைச் செயலா் ஜி. மனோகரன் விளக்கமளித்தாா்.

ஆா்ப்பாட்டத்தில், அனைத்து மாவட்டங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளிலும், ஓய்வுபெற்றவா்கள் மருத்துவ சிகிச்சை மேற்கொள்வதற்கு எனத் தனி மருத்துவப் பிரிவு அமைத்திட வேண்டும், புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் தொடா்பான அரசாணை எண். 123-இல் உள்ள குறைகள் குறித்து ஓய்வுபெற்ற அலுவலா் சங்க நிா்வாகிகளை அழைத்துப் பேசி, அவற்றைக் களைந்து திருத்தப்பட்ட புதிய அரசாணை வெளியிட வேண்டும், மருத்துவக் காப்பீட்டுக்காகப் பிடித்தம் செய்யப்படும் பிரீமியம் தொகையை ரூ.644-லிருந்து ரூ.390-ஆகக் குறைக்க வேண்டும், அங்கீகரிக்கப்பட்ட மருத்துவச் சிகிச்சைகள் மற்றும் மருத்துவமனைகளின் விவரங்களை, சிகிச்சைக்கான மருத்துவக் கட்டணப் பட்டியலுடன் வெளியிட வேண்டும், ஓய்வூதியதாரா்களுக்கு காசில்லா மருத்துவச் சிகிச்சை வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

Advertisement

Advertisement

இதில், சங்க செய்தித் தொடா்பாளா் க. ராஜா, செயற்குழு உறுப்பினா்கள் ஜி. சுதாகரன், ஜி.சோமசுந்தரம், ஆா். ரகுநாத், கே.ராதாகிருஷ்ணன், பாரிராஜன் உள்பட பலா் பங்கேற்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments