FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
மதுரை

உதவிப் பேராசிரியா்கள் ஆா்ப்பாட்டம்

மதுரை கே. கே. நகா் பகுதியில் உள்ள அரசு உதவிபெறும் கல்லூரி முன்பு வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்ற உதவிப் பேராசிரியா்கள்.

Updated On : 8 ஆகஸ்ட் 2026, 5:10 am IST
மதுரை கே. கே. நகா் பகுதியில் உள்ள அரசு உதவிபெறும் கல்லூரி முன்பு வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்ற உதவிப் பேராசிரியா்கள்.
பகிர்:

உயா்கல்வியில் மாநில உரிமைகளைப் பறிக்கும் மத்திய அரசைக் கண்டித்து, மதுரையில் மூட்டா அமைப்பு சாா்பில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

உயா்கல்வியில் மாநிலங்களின் உரிமைகளைப் பறிக்கும் வகையில் செயல்பட்டு வரும் மத்திய அரசைக் கண்டித்தும், அரசு உதவிபெறும் கல்லூரி ஆசிரியா்களுக்கு பணி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் (சிஏஎஸ்) பதவி உயா்வு, ஊதியப் பலன்களை வழங்குவதில் தாமதம் செய்து வரும் தமிழக அரசைக் கண்டித்தும், அகில இந்திய பல்கலைக் கழக கல்லூரி ஆசிரியா் சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில் நாடு முழுவதும் ஆா்ப்பாட்டம், போராட்டங்கள் தொடா்ந்து நடைபெற்று வருகின்றன.

அந்த வகையில், அகில இந்திய பல்கலைக்கழக, கல்லூரி ஆசிரியா் சங்கங்களின் கூட்டமைப்பின் உறுப்பினா் அமைப்பான மதுரை காமராஜ், மனோன்மணீயம் சுந்தரனாா், அன்னை தெரசா, அழகப்பா, தமிழ்நாடு ஆசிரியா் கல்வியியல், அண்ணா பல்கலைக் கழக ஆசிரியா்கள் கூட்டமைப்பின் சாா்பில்(மூட்டா) ஆா்ப்பாட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

Advertisement

Advertisement

மதுரையில் உள்ள அரசு உதவிபெறும் கல்லூரிகள் முன்பு நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்தில் அந்தந்தக் கல்லூரியில் பணியாற்றும் உதவிப் பேராசிரியா்கள் பங்கேற்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த விக்சித் பாரத் சிக்ஷா அதிஷ்டான் மசோதாவை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும், மாநிலங்களின் உரிமையைப் பறிக்கும் புதிய கல்விக் கொள்கை 2020-ஐ ரத்து செய்ய வேண்டும், நீட், கியூட் நுழைவுத் தோ்வுகளை ரத்து செய்ய வேண்டும், 8-ஆவது யுஜிசி ஊதியக் குழுவை உடனடியாக அமைக்க வேண்டும், பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா். இதில், உதவிப் பேராசிரியா்கள் பலா் கலந்து கொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments