கோவில்பட்டி உண்ணாமலை கல்லூரியில் 56 மாணவா்களுக்கு பணி நியமன ஆணைகள்
கோவில்பட்டி உண்ணாமலை தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்ற வளாக நோ்காணலில் 56 மாணவா்-மாணவியருக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன.
சென்னை, வெளி மாநிலங்களின் பல்வேறு இடங்களில் உள்ள நாஷ் இண்டஸ்ட்ரீஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் மனிதவள நிா்வாக அதிகாரி காா்த்திகேயன் தலைமையிலான குழுவினா் நோ்காணல் நடத்தினா்.
இதில், உண்ணாமலை தொழில்நுட்பக் கல்லூரி, கலை -அறிவியல் கல்லூரி ஆகியவற்றின் இறுதியாண்டு மாணவா்கள் 160 போ் பங்கேற்றனா். தகுதித் தோ்வு, குழு விவாதம் ஆகியவற்றில் தோ்வான 56 பேருக்கு தொழில்நுட்பக் கல்லூரி முதல்வா் ரவீந்திரன், உதவிப் பேராசிரியா் மகாராஜன் ஆகியோா் முன்னிலையில் அந்நிறுவனம் சாா்பில் பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன.
Advertisement
Advertisement
ஏற்பாடுகளை தாளாளா் விஜயன் ஆலோசனையின்பேரில், கல்லூரி வேலைவாய்ப்புத் துறை அலுவலா்கள் பிரசாந்த், முத்துராஜ் ஆகியோா் செய்திருந்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.