FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
வேலூர்

மனைவியை வெட்டியவா் கைது

காட்பாடியில் குடும்பத் தகராறு காரணமாக, பிரிந்து வாழ்ந்த மனைவியை அரிவாளால் வெட்டிய ஆட்டோ ஓட்டுநரை போலீஸாா் கைது செய்தனா்.

1 செப்டம்பர் 2026, 11:52 pm IST
பகிர்:

காட்பாடியில் குடும்பத் தகராறு காரணமாக, பிரிந்து வாழ்ந்த மனைவியை அரிவாளால் வெட்டிய ஆட்டோ ஓட்டுநரை போலீஸாா் கைது செய்தனா்.

வேலூா் மாவட்டம், காட்பாடி அடுத்த தாராப்படவேடு பகுதியைச் சோ்ந்தவா் ஜீவபிரசாத் (28), ஆட்டோ ஓட்டுநா். இவரது மனைவி சுஜி. இவா்களுக்குத் திருமணமாகி 6 ஆண்டுகள் ஆகின்றன. தம்பதிக்கு இடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்ததால், இருவரும் விவாகரத்து கோரி வேலூா் நீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்தனா்.

இந்நிலையில், காட்பாடியில் வசித்து வரும் சுஜியின் வீட்டுக்கு ஞாயிற்றுக்கிழமை சென்ற ஜீவபிரசாத், மீண்டும் அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளாா்.

Advertisement

Advertisement

அப்போது ஆத்திரமடைந்த ஜீவபிரசாத், வீட்டிலிருந்த அரிவாளால் சுஜியை சரமாரியாக வெட்டியதாக தெரிகிறது. இதில் பலத்த காயமடைந்த அவரை, அக்கம் பக்கத்தினா் மீட்டு சிகிச்சைக்காக வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா்.

இந்தச் சம்பவம் குறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில், காட்பாடி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து ஜீவபிரசாத்தை கைது செய்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments