ஒடிசா: பிரிந்து சென்ற மனைவிக்காக நரபலி கொடுத்தவர் கைது!
ஒடிசாவில் பிரிந்து சென்ற மனைவிக்காக நரபலி கொடுத்தவர் கைது செய்யப்பட்டிருப்பது பற்றி....
ஒடிசாவில் பிரிந்து சென்ற மனைவிக்காக நரபலி கொடுத்தவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஒடிசா மாநிலம், பாக்டா கிராமத்தில் வசிப்பவர் சத்ருக்ன சாஹு. இவருடைய மனைவி சுமார் பத்து ஆண்டுகளுக்கு முன்பே பிரிந்து சென்றுவிட்டதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் பிரிந்து சென்ற மனைவி மீண்டும் தன்னுடன் சேர்ந்து வாழ வேண்டும் என்பதற்காக மனவளர்ச்சி குன்றிய இளைஞர் ஒருவரின் தலையைத் துண்டித்து நரபலி கொடுத்திருக்கிறார்.
ஆகஸ்ட் 18ஆம் தேதி தேபதமுண்டா கிராமத்தைச் சேர்ந்த சந்தோஷ் கர்செல்லை, சாஹுவின் வீட்டிற்கு அழைத்து வந்து தலையைத் துண்டித்து இந்த கொலையைச் செய்திருக்கிறார். பின்னர் அதைத் தனது வீட்டிற்குள் உள்ள வழிபாட்டுப் பகுதியின் தரையின் அடியில் புதைத்துவிட்டு, உடலின் மற்ற பகுதியை அருகில் உள்ள கிராமத்துக் குளத்தில் வீசியுள்ளார்.
Advertisement
Advertisement
குளத்தில் தலையற்ற உடல் மிதப்பதைக் கண்ட உள்ளூர் மக்கள், அதிகாரிகளுக்குத் தகவல் அளித்த பிறகே இக்கொடூரச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது. அதைத்தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில், சந்தேக நபரைக் கண்டறிந்த போலீஸார், அவரது வீட்டில் சோதனை நடத்தி, வழிபாட்டு இடத்தில் புதைக்கப்பட்டிருந்த தலையைத் தோண்டி எடுத்தனர்.
போலாங்கீர் காவல் கண்காணிப்பாளர் அபிலாஷ் கூறுகையில், இந்த விசாரணை இது சாதாரண கொலை அல்ல, நரபலி சடங்கு என்பதையே சுட்டிக்காட்டுகிறது என்பதை உறுதிப்படுத்தினார். சுமார் பத்து ஆண்டுகளுக்கு முன்பு தன்னை விட்டுப் பிரிந்து சென்ற மனைவி மீண்டும் திரும்பி வர வேண்டும் என்பதற்காகவே குற்றஞ்சாட்டப்பட்ட நபர் இந்தச் சடங்கைச் செய்ததாக போலீஸ் தெரிவித்துள்ளது.
விசாரணையில் சாஹு கொலையை ஒப்புக்கொண்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார்.
In a shocking incident driven by superstition, a man in Odisha’s Bolangir district allegedly beheaded a mentally-challenged youth as part of a human sacrifice ritual to bring back his estranged wife, police said on Friday.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.