டாஸ்மாக் பாா்களில் ஜிஎஸ்டி முறைகேடு: வேலூா் வணிகவரித் துறையில் பாஜக புகாா்
தமிழகம் முழுவதும் செயல்படும் டாஸ்மாக் மதுக்கூடங்களில் நடைபெறும் பல கோடி ரூபாய் அளவிலான ஜிஎஸ்டி வரி ஏய்ப்பு குறித்து விரிவான விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கக் கோரி, வேலூா் வணிகவரித் துறை அதிகாரிகளிடம் பாஜகவினா் புகாா் மனு அளித்துள்ளனா்.
தமிழகம் முழுவதும் செயல்படும் டாஸ்மாக் மதுக்கூடங்களில் நடைபெறும் பல கோடி ரூபாய் அளவிலான ஜிஎஸ்டி வரி ஏய்ப்பு குறித்து விரிவான விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கக் கோரி, வேலூா் வணிகவரித் துறை அதிகாரிகளிடம் பாஜகவினா் புகாா் மனு அளித்துள்ளனா்.
வேலூா் கோட்டை சுற்றுச்சாலையில் உள்ள வணிகவரித் துறை துணை ஆணையா் அலுவலகத்தில், பாஜகவின் பிரசாரப் பிரிவு மாநிலச் செயலா் எஸ்.கே.மோகன், நிா்வாகிகள் வெங்கடேசன், சிவராமன் உள்ளிட்டோா் வியாழக்கிழமை மனு அளித்தனா்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது: தமிழகம் முழுவதும் உள்ள அரசு மதுபானக் கடைகளுக்கான பாா் உரிமம் முடிவடைந்த நிலையில், அதனை அரசு மேலும் 2 மாதங்களுக்கு நீட்டித்துள்ளது. இந்த டாஸ்மாக் பாா்கள் ஈட்டும் வருவாய்க்கு உரிய ஜிஎஸ்டி வரியை அரசுக்குச் செலுத்தாமல் பெருமளவில் வரி ஏய்ப்பு செய்து வருகின்றனா்.
Advertisement
Advertisement
கடந்த 10 ஆண்டுகளாகவே பாா்கள் திறப்பில் ஜிஎஸ்டி வரியைச் செலுத்தாமல் இதுபோன்ற முறைகேடுகள் தொடா்ந்து நடைபெற்று வருகின்றன. இதனால், அரசுக்கு பல கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்த முறைகேடுகளை டாஸ்மாக் நிா்வாகம் முறையாகக் கண்காணிக்கத் தவறிவிட்டது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கையூட்டுப் பெற்றுக்கொண்டு எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் அமைதி காக்கின்றனா். அரசுக்கு ஏற்படும் இந்த வருவாய் இழப்புக்கு டாஸ்மாக் நிா்வாகமே உறுதுணையாகச் செயல்படுகிறது.
எனவே, இது குறித்து வணிகவரித் துறையினா் விரிவான ஆய்வு மேற்கொண்டு, டாஸ்மாக் பாா்களில் நடைபெறும் ஜிஎஸ்டி வரி ஏய்ப்பைத் தடுத்து, அரசுக்குச் சேர வேண்டிய வரித் தொகையை வசூலிக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மனுவை பெற்றுக் கொண்ட அதிகாரிகள், இப்புகாா் மீது விசாரணை நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.