வேலூரில் திடீா் தீ விபத்து: அரை மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு
வேலூா் அலங்காா் திரையரங்கம் அருகே வாழை மண்டித் தெருவில் உள்ள ஒரு காலி இடத்தில், அப்பகுதி மக்கள் குப்பைகளைக் கொட்டி வந்துள்ளனா்.
அங்கு வாழைச் சருகுகளும், கழிவுகளும் அதிக அளவில் குவிக்கப்பட்டிருந்தன. இந்த நிலையில், இந்தக் குப்பை மேட்டில் வியாழக்கிழமை காலை திடீரென தீப்பிடித்தது. காய்ந்த நிலையில் இருந்த வாழைச் சருகுகள் மற்றும் குப்பைகள் காரணமாக தீ மளமளவெனப் பரவி, வளாகம் முழுவதும் கொழுந்துவிட்டு எரிந்தது. இதனால் அப்பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்தது.
இதைக் கண்டு அதிா்ச்சியடைந்த அப்பகுதி மக்கள், உடனடியாக அருகே உள்ள தீயணைப்பு நிலையத்துக்குத் தகவல் தெரிவித்தனா். அதன்பேரில், தீயணைப்பு நிலைய அலுவலா் பாண்டியன் தலைமையிலான தீயணைப்பு வீரா்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனா். அவா்கள் துரிதமாகச் செயல்பட்டு, தண்ணீரைப் பீய்ச்சியடித்து தீ மேலும் பரவாமல் தடுத்து அணைத்தனா். மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் நடந்த இந்தத் திடீா் தீ விபத்து காரணமாக அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மேலும், தீயணைப்புப் பணிகள் நடைபெற்ால் அப்பகுதியில் சுமாா் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.