கோமாளி வேடம் அணிந்து மாணவர்களை வரவேற்ற பள்ளி ஆசிரியர்!
வேலூரில் கோமாளி வேடம் அணிந்து இனிப்பு வழங்கி மாணவர்களைப் வரவேற்ற பள்ளி ஆசிரியர் பற்றி..
வேலூரில் கோமாளி வேடம் அணிந்து இனிப்பு வழங்கி மாணவர்களைப் பள்ளிக்கு ஆசிரியர் வரவேற்றதால் மாணவர்கள் ஆர்வமுடன் மீண்டும் பள்ளிக்கு வருகை தந்தனர்.
வேலூர் மாவட்டத்தில் கோடை விடுமுறைக்குப் பிறகு இன்று பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டது. குடியாத்தம் அருகே ராஜாகுப்பம் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஆசிரியர்கள் இனிப்பு வழங்கி மாலை அணிவித்து மாணவர்களைப் பள்ளிக்கு வரவேற்றனர்.
கோடை விடுமுறைக்குப் பிறகு இன்று பள்ளிக்கு வரக்கூடிய மாணவர்களை இப்பள்ளியின் தேசிய நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியர் கோபிநாத் என்பவர் கோமாளி வேடம் அணிந்து மாணவர்களை சிரிப்பூட்டி பாடலுடன் கோமாளி ஆட்டம் போட்டு பள்ளிக்கு வரவேற்றனர். இதனால் கோடை விடுமுறைக்குப் பிறகு பள்ளிக்கு வரக்கூடிய மாணவர்கள் மகிழ்ச்சியுடன் பள்ளிக்கு வருகை தந்தனர்.
Advertisement
Advertisement
In Vellore, students returned to school with enthusiasm after a teacher welcomed them by dressing up as a clown and distributing sweets.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.