காங்கிரஸ் வேட்பாளர் பிரசாரம்
சத்தியமங்கலம், அக். 8: சத்தியமங்கலம் நகர்மன்றத் தலைவருக்கான காங்கிரஸ் வேட்பாளர் பிஎம்எம் சுந்தர் தீவிரப் பிரசாரம் மேற்கொண்டுள்ளார். ÷பி.எம்.எம். சுந்தர் சனிக்கிழமை தனது ஆதரவாளர்களுடன் வீதி, வீதியாக வ
சத்தியமங்கலம், அக். 8: சத்தியமங்கலம் நகர்மன்றத் தலைவருக்கான காங்கிரஸ் வேட்பாளர் பிஎம்எம் சுந்தர் தீவிரப் பிரசாரம் மேற்கொண்டுள்ளார்.
÷பி.எம்.எம். சுந்தர் சனிக்கிழமை தனது ஆதரவாளர்களுடன் வீதி, வீதியாக வாக்குச் சேகரித்தார். கோட்டூவீராம்பாளையத்தில் நெசவாளர்கள் அதிகம் வசிக்கும் 19 மற்றும் 20-வது வார்டு கைக்கோளர் வீதி, பழைய தபால் ஆபிஸ் வீதி, முனியப்பன் கோயில் வீதி மற்றும் பிள்ளையார் கோயில் வீதிகளுக்குச் சென்றார். அங்குள்ள வாக்காளர்களிடம் நெசவாளர்களின் பிரச்னைகளுக்கு தீர்வு காண்பதாக வாக்குறுதி அளித்தார். ÷தனது செல்போன் எண்ணை அனைவருக்கும் கொடுத்து 24 மணி நேரமும் மக்கள் பிரச்னைக்காக பாடுபடப் போவதாகவும் தெரிவித்தார்.
÷நகராட்சி வணிக வளாகம், திருமண மண்டபம் மற்றும் தங்கும் விடுதி கட்டித் தரப்படும். சத்தி நகராட்சியை முறைகேடில்லாத நகராட்சியாக மாற்றுவதாகவும் வாக்குறுதியளித்துள்ளார். அவரது மனைவியும் பிரபல பெண் மருத்துவருமான விஜயாவும் தனது கணவருக்கு ஆதரவாக மக்களிடம் வாக்கு சேகரித்து வருகிறார்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.