FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கோயம்புத்தூர்

நீலகிரி மாவட்டத்தில் 812 வாக்குச் சாவடிகள்

உதகை, அக். 8: நீலகிரி மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சிகளுக்கு 410 வாக்குச்சாவடிகளும், நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கு 402 வாக்குச்சாவடிகளுமாக மொத்தம் 812 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

Updated On : 20 செப்டம்பர் 2012, 5:18 am IST
பகிர்:

உதகை, அக். 8: நீலகிரி மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சிகளுக்கு 410 வாக்குச்சாவடிகளும், நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கு 402 வாக்குச்சாவடிகளுமாக மொத்தம் 812 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியரும், தேர்தல் அலுவலருமான அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளதாவது:

 ÷உள்ளாட்சித் தேர்தல்களில் ஊரக உள்ளாட்சிப் பகுதிகளில் வாக்குச்சீட்டு முறை அமலில் உள்ளதால் இதற்கு பயன்படுத்த ஏதுவாக 2,707 சிறிய வாக்குப் பெட்டிகளும், 374 பெரிய வாக்குப் பெட்டிகளும் அந்தந்த ஊராட்சி ஒன்றியங்களுக்கு பிரித்தளிக்கப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.

Advertisement

Advertisement

 நகர்ப்புற உள்ளாட்சிகளில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படவுள்ளதால், ஒரு வாக்குச்சாவடிக்கு தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர் தேர்தலுக்கான இரண்டு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு மொத்தம் 900 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டு அவற்றை பாதுகாப்பான இருப்பறைகளில் வைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

 இத்தேர்தலில் உதகை, குன்னூர், கூடலூர் மற்றும் நெல்லியாளம் நகராட்சிகளுக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அந்தந்த நகர்மன்றங்களின் கூட்ட அரங்கில் வைக்கப்பட்டுள்ளன.

 பேரூராட்சிகளுக்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் வாக்குப் பெட்டிகளில் தேவர்சோலை, ஓவேலி மற்றும் நடுவட்டத்திற்கான வாக்குப் பெட்டிகள் கூடலூர் நகர்மன்ற கூட்ட அரங்கிலும், உலிக்கல் மற்றும் ஜெகதளா பேரூராட்சிகளுக்கான வாக்குப் பெட்டிகள் குன்னூர் நகர்மன்ற கூட்ட அரங்கிலும், கேத்தி, கீழ்குந்தா, அதிகரட்டி, பிக்கட்டி மற்றும் சோலூர் பேரூராட்சிகளுக்கான வாக்குப் பெட்டிகள் உதகையிலுள்ள மலைப்பகுதி மேம்பாட்டுத்திட்ட கூட்ட அரங்கிலும், கோத்தகிரி பேரூரட்சிக்கான வாக்குப்பெட்டிகள் கோத்தகிரி பேரூராட்சி மன்ற கூட்ட அரங்கிலும் வைக்கப்பட்டுள்ளன.

 இத்தேர்தலில் பதிவாகும் வாக்குகள் 19 மையங்களில் எண்ணப்படுகின்றன. உதகை நகராட்சிக்கான வாக்குகள் உதகை அண்ணா கலையரங்கிலும், குன்னூர் நகராட்சிக்கான வாக்குகள் குன்னூர் புனித அந்தோணியார் மேனிலைப்பள்ளியிலும், கூடலூர் நகராட்சிக்கான வாக்குகள் கூடலூர் அரசு மேனிலைப்பள்ளியிலும், நெல்லியாளம் நகராட்சிக்கான வாக்குகள் பந்தலூர் புனித பிரான்சிஸ் சேவியர் தொடக்கப்பள்ளியிலும் எண்ணப்படும்.

 பேரூராட்சிகளில் தேவர்சோலைக்கான வாக்குகள் தேவர்சோலை அரசு மேனிலைப் பள்ளியிலும், உலிக்கல் வாக்குகள் திருவள்ளுவர் நகர் ஐயன் திருவள்ளுவர் படிப்பகத்திலும், ஜெகதளா வாக்குகள் ஜெகதளா சமுதாயக் கூடத்திலும், கேத்தி வாக்குகள் சாந்தூர் சிஎஸ்ஐ மேனிலைப்பள்ளியிலும், கீழ்க்குந்தா மற்றும் பிக்கட்டி பேரூராட்சி வாக்குகள் மஞ்சூர் அரசு மேனிலைப்பள்ளியிலும், கோத்தகிரி வாக்குகள் கோத்தகிரி அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவனத்திலும், நடுவட்டம் மற்றும் ஓவேலி பேரூராட்சி வாக்குகள் கூடலூர் அரசு மேனிலைப்பள்ளியிலும், அதிகரட்டி வாக்குகள் அதிகரட்டி அரசு மேனிலைப்பள்ளியிலும், சோலூர் பேரூராட்சி வாக்குகள் நாகர்த்தனை அரசு மேனிலைப் பள்ளியிலும் எண்ணப்படும்.

 உதகை ஊராட்சி ஒன்றியத்துக்கான வாக்குகள் உதகை புனித ஜோசப் மேனிலைப்பள்ளியிலும், குன்னூர் ஊராட்சி ஒன்றிய வாக்குகள் குன்னூர் அறிஞர் அண்ணா மேனிலைப்பள்ளியிலும், கோத்தகிரி ஊராட்சி ஒன்றிய வாக்குகள் கோத்தகிரி அரசு மேனிலைப்பள்ளியிலும், கூடலூர் ஊராட்சி ஒன்றிய வாக்குகள் கூடலூர் அரசு மேனிலைப்பள்ளியிலும் எண்ணப்படும் எனவும் ஆட்சியர் அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments