FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கோயம்புத்தூர்

ராமேஸ்வரம் ரயிலை தொடர்ந்து இயக்க கோரிக்கை

ஈரோடு, அக். 8: ராமேஸ்வரம் ரயிலைத் தொடர்ந்து இயக்க வேண்டும் என காங்கிரஸ் கோரிக்கை விடுத்துள்ளது.  ÷கோவையில் இருந்து ஈரோடு வழியாக ராமேஸ்வரத்திற்கு ரயில்வசதி அமைத்துக் கொடுக்கக் கோரி பல்வேறு அமைப்புகள் ம

Updated On : 20 செப்டம்பர் 2012, 5:19 am IST
பகிர்:

ஈரோடு, அக். 8: ராமேஸ்வரம் ரயிலைத் தொடர்ந்து இயக்க வேண்டும் என காங்கிரஸ் கோரிக்கை விடுத்துள்ளது.

 ÷கோவையில் இருந்து ஈரோடு வழியாக ராமேஸ்வரத்திற்கு ரயில்வசதி அமைத்துக் கொடுக்கக் கோரி பல்வேறு அமைப்புகள் மற்றும் பயணிகள் வலியுறுத்தி வந்ததையடுத்து கடந்த ஆகஸ்ட் மாதத்தில் இருந்து வாராந்திர ரயில் இயக்கப்பட்டு வந்தது. இந்த ரயில் ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை இரவு கோவையில் இருந்து புறப்பட்டு மறுநாள் காலை ராமேஸ்வரம் சென்றடைந்தது. இந்நிலையில், இந்த சேவை நிறுத்தப்படுவதாக என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. இதற்கேற்ப அடுத்த வாரத்திற்கான முன்பதிவு ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த ரயில் கடந்த மூன்று மாதங்கள் இயக்கப்பட்டது போல தொடர்ந்து இயக்க தென்னக ரயில்வே நிர்வாகம் முன்வர வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியின் சிறுபான்மை பிரிவு மாவட்டச் செயலர் கே.என்.பாட்ஷா கோரிக்கை விடுத்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments