FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கோயம்புத்தூர்

45 வாக்குச் சாவடிகள் பிரச்னைக்குரியவை: எஸ்.பி. நிஜாமுதீன்

குன்னூர், அக். 8: நீலகிரி மாவட்டத்தில் 45 வாக்குச் சாவடிகள் பிரச்னைக்குரியவை என்று மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் எஸ்.நிஜாமுதீன் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளார்.  ÷குன்னூரில் காவல் துறையினரால் பறிமுத

Updated On : 20 செப்டம்பர் 2012, 5:18 am IST
பகிர்:

குன்னூர், அக். 8: நீலகிரி மாவட்டத்தில் 45 வாக்குச் சாவடிகள் பிரச்னைக்குரியவை என்று மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் எஸ்.நிஜாமுதீன் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளார்.

 ÷குன்னூரில் காவல் துறையினரால் பறிமுதல் செய்யப்பட்ட திருட்டுப் போன பொருட்களை பார்வையிட்டபின் செய்தியாளர்களிடம் அவர் கூறியது:

 ÷நீலகிரி மாவட்டத்தில் உள்ளாட்சித் தேர்தலுக்காக கூடுதலாக 90 மொபைல் பார்ட்டி காவலர்கள் வரவழைக்கப் பட உள்ளனர். கக்கநள்ளா உள்ளிட்ட சோதனைச் சாவடி வழியாக யாரேனும் தேர்தல் நேரத்தில் அத்து மீறி உள்ளே நுழைகிறார்களா என்பதைக் கண்காணிக்க 24 மணி நேரமும் கடுமையாக சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

 ÷ வெளியூர் ஆட்கள் தங்கும் விடுதிகளில் தங்கியுள்ளனரா என்றும் காவல் துறையினர் சோதனை செய்து வருகின்றனர். ஒவ்வொரு நாளும் பல்வேறு இடங்களில் திடீரென வாகன தணிக்கை செய்யப்படுகிறது.

 ÷நீலகிரி மாவட்டத்தில் 721 வாக்குச் சாவடிகளில் 45 வாக்குச் சாவடிகள் பிரச்னைக் குரியதாக கண்டறியப்பட்டுள்ளது. மஞ்சூர் பகுதியில் மட்டும் தேர்தல் சம்பந்தமாக ஒரு வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

 ÷குன்னூர் காவல் துறை துணை கண்காணிப்பாளர் ம.மாடசாமி, ஆய்வாளர்கள் எல்.பாஸ்கரன், கே.சென்னகேசவன், சி.தங்கப்பாண்டியன், கே.முருகாசலம் ஆகியோர் உடனிருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments