குறுகிய சாலைகளை செப்பனிட நவீன இயந்திரம்
கோவை மாநகராட்சிப் பகுதிகளில் குறுகிய சாலைகளை செப்பனிட நவீன இயந்திரம் வரவழைக்கப்பட்டு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கோவை மாநகராட்சிப் பகுதிகளில் குறுகிய சாலைகளை செப்பனிட நவீன இயந்திரம் வரவழைக்கப்பட்டு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கோவை மாநகராட்சிப் பகுதிகளில் சுமார் 3,500 வீதிகள் உள்ளன. இதில் பல இடங்களில் மாநகராட்சி சார்பில் அமைக்கப்பட்ட தார் சாலைகள் சேதமடைந்து குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. இவை தற்காலிகமாக செப்பனிடப்படும்.
இதுபோன்ற பணிகளை மேற்கொள்ள 8 பேர் பணியமர்த்தப்படுவர். இதில் ஒருவர் சாலையில் தார் ஊற்றவும், ஒருவர் குழியை நிரப்பவும், மற்றொருவர் ரோடு ரோலர் மூலம் சாலையை சமன்படுத்தும் பணியில் ஈடுபடுவர்.
இந்த நிலையில் தார் சாலை செப்பனிடும் பணிகளுக்காக மாநகராட்சி நிர்வாகம் சார்பில் தனியார் நிறுவனத்திடம் இருந்து நவீன இயந்திரம் பெறப்பட்டுள்ளது.
இந்த இயந்திரத்தை கொண்டு சாலையை செப்பனிடும் பணிக்கான பரிசோதனை புதன்கிழமை மேற்கொள்ளப்பட்டது. நவீன இயந்திரம் சாலையில் காணப்படும் பள்ளம் உள்ள பகுதியில் கொண்டுச் சென்று நிறுத்தப்படும். அந்த இயந்திரம் பள்ளத்தை சீர் செய்து சரியான அளவில் தார், கற்களைக் கொண்டு பள்ளத்தை தானாகவே சமன்படுத்தும்.
புணேவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் தனியார் நிறுவனத்தினர் மாநகராட்சியை அணுகி தங்களது இயந்திரத்தின் செயல்பாடுகள் குறித்து விவரித்தனர். அதனடிப்படையில் சர் சண்முகம் சாலையில் உள்ள குழிகள் நவீன இயந்திரத்தை பயன்படுத்தி சமன்படுத்தப்பட்டது.
இந்த நவீன இயந்திரத்தைக் கொண்டு முறையாக ஒப்பந்த அடிப்படையில் தேர்வு செய்யப்பட்ட பகுதிகளில் பணிகள் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும். இந்த இயந்திரத்தை கொண்டு சாலைகள் செப்பனிடும்போது சாலைகள் தரமாக இருப்பதுடன், சுற்றுச்சூழல் மாசு ஏற்படாது என மாநகராட்சி அதிகாரி தெரிவித்தார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.