கோவை அருகே யானை சாவு
கோவை மாவட்டம், காரமடைக்கு மேற்கே உள்ள தோலம்பாளையம் வனப் பகுதியில் வாயில் காயத்துடன் சுற்றிக் கொண்டிருந்த யானை புதன்கிழமை உயிரிழந்தது.
கோவை மாவட்டம், காரமடைக்கு மேற்கே உள்ள தோலம்பாளையம் வனப் பகுதியில் வாயில் காயத்துடன் சுற்றிக் கொண்டிருந்த யானை புதன்கிழமை உயிரிழந்தது.
பெரியநாயக்கன்பாளையம் வனச் சரகத்துக்கு உள்பட்ட பாலமலை பெரும்பதி வனப் பகுதியில் வாயில் காயத்துடன் 4 வயது மதிக்கத்தக்க ஆண் யானை சுற்றிக் கொண்டிருந்தது. அடிக்கடி அடர்ந்த வனப் பகுதிக்குள் செல்வதும், பின்னர் அங்கிருக்கும் குளத்துக்கு வருவதுமாக இருந்தது. செவ்வாய்க்கிழமை காலை அது பாலமடையிலிருந்து இடம்பெயர்ந்து தோலம்பாளையத்திற்கு அருகே உள்ள வனப் பகுதிக்கு சென்றது.
இந்நிலையில், நீலாம்பதி கிராமத்துக்கு அருகிலுள்ள அடர்ந்த வனப் பகுதியில் அந்த யானை புதன்கிழமை இறந்து கிடந்தது. இதுகுறித்து பெ.நா.பாளையம் வனத் துறைக்கு ஆதிவாசிகள் தகவல் அளித்தனர். சம்பவ இடத்துக்கு சென்ற மருத்துவக் குழுவினர் யானையின் உடலை சம்பவ இடத்திலேயே உடற்கூறு பரிசோதனை செய்து அடக்கம் செய்தனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.