அஞ்சல் துறை ஊக்கத் தொகைக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்
அஞ்சல் தலை சேகரிப்பில் ஆர்வம் உள்ள பள்ளிக் குழந்தைகளுக்கு இந்திய அஞ்சல் துறை ஊக்கத் தொகை அளிக்கிறது.
அஞ்சல் தலை சேகரிப்பில் ஆர்வம் உள்ள பள்ளிக் குழந்தைகளுக்கு இந்திய அஞ்சல் துறை ஊக்கத் தொகை அளிக்கிறது. இதற்கு விண்ணப்பிக்க ஆகஸ்ட் 16ஆம் தேதி கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, 6 முதல் 9ஆம் வகுப்பு வரையிலான மாணவர்கள், முந்தைய இறுதித் தேர்வில் குறைந்தபட்சம் 60 சதவீத மதிப்பெண்கள் பெற்றவர்கள், பள்ளியில் உள்ள அஞ்சல் தலை சேகரிப்பு சங்கம் அல்லது தனிப்பட்ட முறையில் அஞ்சல் தலை சேமிப்புக் கணக்கு வைத்திருப்பவர்கள் ஊக்கத் தொகை பெறத் தகுதியானவர்கள். இதற்கான விண்ணப்பங்களை தலைமை அஞ்சல் அலுவலகங்களில் பெற்று மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். அஞ்சல் தலை தொடர்பான விநாடி விநா, அஞ்சல் தலை சேகரிப்பில் அவர்களின் சாதனைகளின் அடிப்படையில் தகுதித் தேர்வு நடத்தப்பட்டு தேர்வு செய்யப்படுவர் என்று மேற்கு மண்டல அஞ்சல் துறைத் தலைவர் மரியம்மா தாமஸ் தெரிவித்துள்ளார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.