இரு சக்கர வாகனத்தில் சென்றவர் கார் மோதி சாவு
சூலூர் அருகே இரு சக்கர வாகனத்தில் சென்றவர் கார் மோதி பலியானார்.
சூலூர் அருகே இரு சக்கர வாகனத்தில் சென்றவர் கார் மோதி பலியானார்.
சூலூரை அடுத்த முத்துகவுண்டன் புதூர் பகுதியைச் சேர்ந்தவர் மாரிமுத்து (42). இதே பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.
கடந்த 12 ஆம் தேதி இரவு வேலை முடிந்து தனது இரு சக்கர வாகனத்தில் சூலூர் பிரிவு அருகே சென்று கொண்டிருந்தார்.
அப்போது எதிரே வந்த ஆம்னி வேன் மோதியதில் படுகாயம் அடைந்தார். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு செவ்வாய்கிழமை இரவு உயிர் இழந்தார். இதுகுறித்து சூலூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.