இரு சக்கர வாகனம் மோதி லாரி உரிமையாளர் சாவு
சூலூரை அடுத்த கணியூரில் இரு சக்கர வாகனம் மோதியதில் லாரி உரிமையாளர் பலியானார்.
சூலூரை அடுத்த கணியூரில் இரு சக்கர வாகனம் மோதியதில் லாரி உரிமையாளர் பலியானார்.
ஆந்திர மாநிலம், பொதிதி என்ற ஊரைச் சேர்ந்தவர் பாஷா (72). இவர் சொந்தமாக லாரி வைத்துள்ளார். குண்டூர் மாவட்டத்தைச் சேர்ந்த சீனிவாசராவ் என்பவர் ஓட்டுநராக வேலை செய்கிறார். இவர்கள் கணியூர் சுங்கச்சாவடி அருகே கடந்த வெள்ளிக்கிழமை லாரியை நிறுத்தியுள்ளனர். அப்போது லாரியில் இருந்து இறங்கி பாஷா பின்புறம் சென்றதாகத் தெரிகிறது. அப்போது அவ்வழியே வந்த இரு சக்கர வாகனம் அவர் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். இதுகுறித்து கருமத்தம்பட்டி போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.