FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கோயம்புத்தூர்

பள்ளபாளையம் நூற்பாலையில் தீ 

சூலூரை அடுத்த பள்ளபாளையத்தில் நூற்பாலையில் ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் ரூ. 1 கோடி மதிப்புள்ள பொருள்கள் சேதமானது. 

Updated On : 20 ஆகஸ்ட் 2018, 8:51 am IST
பகிர்:

சூலூரை அடுத்த பள்ளபாளையத்தில் நூற்பாலையில் ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் ரூ. 1 கோடி மதிப்புள்ள பொருள்கள் சேதமானது. 
கோவை மாவட்டம், பள்ளபாளையத்தை அடுத்த ஒண்டிப்புதூரைச் சேர்ந்த சுரேஷ் அப்பகுதியில் நூற்பாலை வைத்துள்ளார். ஞாயிற்றுக்கிழமை காலை 6.45 மணியளவில் நடைப் பயிற்சி மேற்கொண்ட சில இளைஞர்கள் அவ்வழியே வரும்போது நூற்பாலையின் ஓர் அறையில் இருந்து புகை வருவதைப் பார்த்து அங்கு பணிபுரிபவர்களிடம் தெரிவித்தனர். உடனே அனைவரும் விரைந்து தண்ணீரை எடுத்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். 
தீயணைப்புத் துறைக்கு உடனடியாகத் தகவல் தெரிவித்தனர். சூலூர் தீயணைப்புத் துறையினர் தீயணைப்பு மீட்பு அலுவலர் கணேசன் தலைமையில்  அப்பகுதிக்கு வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் அதற்குள்ளாகவே தீ நூற்பாலை முழுவதும் பரவியது. சுமார் இரண்டு மணி நேரம் போராடி தீயைக் கட்டுக்குள் கொண்டுவந்தனர். இச்சம்பவத்தில் அங்கு இருந்த நூல் பண்டல்கள், பஞ்சு , இயந்திரங்கள் உள்ளிட்டவை தீயில் எரிந்து முற்றிலுமாக சேதமாயின. சேத மதிப்பு ரூ.ஒரு கோடிக்கும் மேல் இருக்கும் என தெரிகிறது. 
தீயணைப்புப் துறையினரின் முதல் கட்ட விசாரணையில் மின் கசிவால் இந்த தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என தெரியவந்துள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments