FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கோயம்புத்தூர்

வால்பாறையில் இருந்து பொள்ளாச்சி செல்ல ரூ.300 வேன் கட்டணம்: பயணிகள் தவிப்பு

வால்பாறையில் இருந்து பொள்ளாச்சி செல்ல ஒருவருக்கு ரூ.300 கொடுத்து வேனில் செல்ல வேண்டிய நிலை உள்ளதால் பயணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Updated On : 20 ஆகஸ்ட் 2018, 8:49 am IST
பகிர்:

வால்பாறையில் இருந்து பொள்ளாச்சி செல்ல ஒருவருக்கு ரூ.300 கொடுத்து வேனில் செல்ல வேண்டிய நிலை உள்ளதால் பயணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கோவை மாவட்டம், வால்பாறையில் கடந்த சில நாள்களாக கனமழை பெய்துவருகிறது. பல்வேறு இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதோடு சாலையும் கடுமையாக சேதம் அடைந்துள்ளது. கடந்த வியாழக்கிழமை விடியற்காலை  அரசுப் போக்குவரத்துப் பணிமனைக்குள் வெள்ளம் புகுந்தது. இதனால் அனைத்து பேருந்துகளும் வெளியே கொண்டு வரப்பட்டு அரசுப் பள்ளி மற்றும் சாலையில் நிறுத்தப்பட்டுள்ளன. 
வால்பாறை எஸ்டேட் பகுதி சாலைகளில் மண் சரிவு மற்றும் மரம் விழுந்துள்ளதால் பேருந்து போக்குவரத்து தொடர்ந்து நான்காவது நாளாக நிறுத்தப்பட்டுள்ளது. இதைப் பயன்படுத்தி இப்பகுதியில் இயங்கும் தனியார்ஆம்னி வேன் ஓட்டுநர்கள் வால்பாறையில் இருந்து பொள்ளாச்சிக்குச்  செல்ல ஒருவருக்கு ரூ.300 வசூல் செய்து வேன்களை இயக்கி வருகின்றனர். 
இதேபோல் முடீஸ் பகுதிக்கு ரூ.30, ரொட்டிக்கடைக்கு ரூ.20 என கூடுதல் கட்டணம் வசூலித்து வருவதால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். 
பேருந்துகளை இயக்க போக்குவரத்துக் கழக அதிகாரிகள் துரித நடவடிக்கை எடுக்காமல் மெத்தனமாக இருப்பதாக பொதுமக்கள் மத்தியில் புகார் எழுந்துள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments