விசைத்தறி மோட்டாரில் சிக்கி தொழிலாளி சாவு
சூலூரை அடுத்த பொன்னாக்காணியில் விசைத்தறி கூடத்தில் பணிபுரிந்த தொழிலாளி விசைத்தறி மோட்டாரில் சிக்கி ஞாயிற்றுக்கிழமை பலியானார்.
சூலூரை அடுத்த பொன்னாக்காணியில் விசைத்தறி கூடத்தில் பணிபுரிந்த தொழிலாளி விசைத்தறி மோட்டாரில் சிக்கி ஞாயிற்றுக்கிழமை பலியானார்.
சூலூரை அடுத்த சுல்தான்பேட்டைக்கு உள்பட்ட போகம்பட்டியில் வசிப்பவர் சதாசிவம் (40). இவர் பொன்னாக்காணியில் நடராஜ் என்பவரின் விசைத்தறி கூடத்துக்கு ஞாயிற்றுக்கிழமை வேலைக்கு சென்றார். அங்கு பாதுகாப்புக் கருவிகள் இல்லாமல் மோட்டார் அருகில் விசைத்தறி பழுதை நீக்க சதாசிவம் முயன்றுள்ளார்.
இதில் எதிர்பாராதவிதமாக விசைத்தறி மின் மோட்டாரின் நாடாவில் அவர் சிக்கிக்கொண்டார்.
இதில் படுகாயம் அடைந்தவரை மீட்டு சூலூரில் உள்ள தனியார் மருத்துவ மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து சுல்தான்பேட்டை போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்துவருகின்றனர்.
இறந்த சதாசிவத்துக்கு மனைவியும், 4 வயதில் மகனும் உள்ளனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.