FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

குரூப் 2 தேர்வு: இலவச பயிற்சி வகுப்பு அன்னூரில் செப்டம்பர் 2இல் துவக்கம்

அன்னூரில் அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத் அமைப்பு சார்பில் குரூப்-2 தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் செப்டம்பர் 2ஆம் தேதி துவங்கப்பட உள்ளது.

30 ஜனவரி 2024, 10:07 pm IST
பகிர்:

அன்னூரில் அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத் அமைப்பு சார்பில் குரூப்-2 தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் செப்டம்பர் 2ஆம் தேதி துவங்கப்பட உள்ளது.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப்-2 தேர்வுக்கு அன்னூரில் உள்ள அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத் அமைப்பு சார்பில் இலவசப் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட உள்ளது. இந்த பயிற்சி வகுப்புகள் அன்னூரில் உள்ள சரவணா கட்டடத்தில் செப்டம்பர்  2ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) முதல் துவங்க உள்ளது.  
இந்த பயிற்சி வகுப்புக்கள் வாரம்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை நடைபெற உள்ளது.  நவம்பர் 4ஆம் தேதி வரை இந்த பயிற்சி வகுப்புக்கள் நடைபெற உள்ளது. குரூப் -2 தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள அன்னூர் வட்டத்துக்கு உள்பட்டவர்கள் இதில் கலந்து கொண்டு பயன்பெறலாம்.  
மேலும் விபரங்களுக்கு 98420 44701 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத் அமைப்பு நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments