தமிழகத்தில் பாஜகவுக்கு வாய்ப்பே இல்லை
தமிழகத்தில் பாஜகவுக்கு வாய்ப்பே இல்லை என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் சு.திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் பாஜகவுக்கு வாய்ப்பே இல்லை என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் சு.திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் புதன்கிழமை கூறியதாவது:
எத்தனைக் கட்சிகள் கூட்டணி அமைத்தாலும் பாஜகவை வீழ்த்த முடியாது என மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் சொல்லி இருப்பது தொடர்பான கேள்விக்கு, அவர் அப்படித்தான் சொல்லியாக வேண்டும்.
தமிழகத்தில் பாஜகவுக்கு வாய்ப்பே இல்லை. தலைவராகும் தகுதி ஸ்டாலினுக்கு இல்லை என அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கூறியுள்ளார். திமுகவில் படிப்படியாக பல்வேறு பதவியில் இருந்து தற்போது தலைவர் பதவிக்கு முன்னேறியவர் மு.க.ஸ்டாலின்.
அனுபவமிக்க அவரை அமைச்சர் என்ற தகுதியை மட்டும் வைத்துக் கொண்டு ஓ.எஸ்.மணியன் விமர்சிப்பதும், தரம் தாழ்ந்து பேசுவதும் கண்டனத்துக்குரியது.
ஒரே தலைமை இல்லாமல் இரட்டைக் குதிரையில் சவாரி செய்வதால் கட்சியும், ஆட்சியும் சரியில்லாமல் உள்ளது என்றார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.