FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கோயம்புத்தூர்

மத்திய சிறையில் போலீஸார் ஆய்வு:கூர்மையான ஆயுதங்கள் பறிமுதல்

கோவை மத்திய சிறையில் போலீஸார் ஞாயிற்றுக்கிழமை நடத்திய திடீர் சோதனையில் கைதிகள் மறைத்து

Updated On : 31 டிசம்பர் 2018, 8:46 am IST
பகிர்:

கோவை மத்திய சிறையில் போலீஸார் ஞாயிற்றுக்கிழமை நடத்திய திடீர் சோதனையில் கைதிகள் மறைத்து வைத்திருந்த கத்தி போன்ற கூரிய ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
  கோவை மத்திய சிறையில் கைதிகளிடையே போதைப் பொருள் புழக்கம் அதிகரித்திருப்பதாக போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. இதன்பேரில் அடிக்கடி அங்கே சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அண்மையில், கைதிகளுக்கு இடையே ஏற்படவிருந்த மோதல் தடுக்கப்பட்டது. 
 இந்நிலையில் பல்வேறு கும்பல்களாகப் பிரிந்துள்ள கைதிகள் இடையே மோதல் ஏற்பட உள்ளதாக போலீஸாருக்கு மீண்டும் தகவல் கிடைத்தது. இதன்பேரில் காவல் உதவி ஆணையர்(சட்டம், ஒழுங்கு) சுந்தரராஜன் தலைமையில் 40க்கும் மேற்பட்ட காவலர்கள் கோவை மத்திய சிறையில் ஞாயிற்றுக்கிழமை சோதனையிட்டனர். அப்போது,  கைதிகள் சிலர், சாப்பாட்டுத் தட்டை மடித்து கத்தி போன்ற கூர்மையான ஆயுதங்களாக மாற்றி வைத்திருந்தது தெரியவந்தது. 
இவற்றை போலீஸார் பறிமுதல் செய்து சம்பந்தப்பட்ட கைதிகளிடம் தொடர் விசாரணை மேற்கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments