ஓய்வுபெற்றார்
தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தின் கோவை பதிப்பில் ரோட்டரி பிரிவில் பணியாற்றி வந்த ஆர்.சஞ்சீவி (58) செவ்வாய்க்கிழமை பணி ஓய்வுபெற்றார்.
தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தின் கோவை பதிப்பில் ரோட்டரி பிரிவில் பணியாற்றி வந்த ஆர்.சஞ்சீவி (58) செவ்வாய்க்கிழமை பணி ஓய்வுபெற்றார்.
தெலங்கானா மாநிலம், ஹைதராபாதைச் சேர்ந்த சஞ்சீவி, தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தின் ஹைதராபாத் அலுவலகத்தில் ஸ்டோர்ஸ் பிரிவில் கடந்த 1983ஆம் ஆண்டு பணிக்கு சேர்ந்தார். பின்னர் 1999ஆம் ஆண்டு முதல் கோவை பதிப்பில் ரோட்டரி பிரிவில் உதவியாளராக வேலை செய்து வந்தார்.
இந்நிலையில், இவர் செவ்வாய்க்கிழமை பணி ஓய்வுபெற்றார். இதையடுத்து, நடைபெற்ற பிரிவு உபசார விழாவில் கோவை பதிப்பின் மேலாளர் தியாகராஜன் மற்றும் துறைத் தலைவர்கள் சஞ்சீவிக்கு வாழ்த்துத் தெரிவித்தனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.