FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கோயம்புத்தூர்

சுற்றுச்சூழல் விழிப்புணர்வு ஓவியம்: சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்த மாணவி

கோவை மாணவி வரைந்த சுற்றுச்சூழல் விழிப்புணர்வு ஓவியம் ஆசிய சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்துள்ளது.

Updated On : 26 ஜூன் 2018, 7:19 am IST
பகிர்:

கோவை மாணவி வரைந்த சுற்றுச்சூழல் விழிப்புணர்வு ஓவியம் ஆசிய சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்துள்ளது.
கோவை, ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் உயிரி மருத்துவம் இரண்டாம் ஆண்டு பயிலும் மாணவி ஆ.தர்ஷினி. இவர், "இயற்கை இந்தியா' எனும் தலைப்பில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வுக்காக மிகப் பெரிய ஓவியம் வரையும் முயற்சியில் அண்மையில் ஈடுபட்டார்.
சுந்தராபுரத்தில் நடைபெற்ற இந்த முயற்சியில் அவர், 68 அடி நீளமும், 38 அடி அகலமும் கொண்ட மிகப் பெரிய துணியில், 12 மணி நேரத்தில் மிகப் பெரிய ஓவியத்தை வரையத் தொடங்கினார். குறிப்பிட்ட நேரத்துக்கு 80 நிமிடங்கள் முன்னதாகவே ஓவியத்தை வரைந்து முடித்த அவர், சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்ததாக அரங்குக்கு வந்திருந்த ஆசிய சாதனைப் புத்தகத்தின் பிரதிநிதி ஜெயகிருஷ்ண சர்மாவால் அறிவிக்கப்பட்டது.
இந்த ஓவியத்தை தர்ஷினி, மஞ்சள், வேப்பிலை, பீட்ரூட், செம்மண், மருதாணி உள்ளிட்ட வண்ணங்களைக் கொடுக்கும் இயற்கைப் பொருள்களைக் கொண்டே வரைந்திருந்தார். மாணவியை ஸ்டேன்ஸ் பள்ளியின் கலை ஆசிரியர் தூரிகை சின்னராஜ், மாவட்ட வனப் பாதுகாவலர் ராமசுப்பிரமணியன், ஓவியர் ஜீவானந்தன் உள்ளிட்டோர் நேரில் சந்தித்து வாழ்த்துத் தெரிவித்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments