உணவு வீணடிக்கப்படுவதைத் தவிர்க்க விழிப்புணர்வு குறும்படம் வெளியீடு
உணவு வீணடிக்கப்படுவதைத் தவிர்ப்பதற்காக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ள குறும்படம் கோவையில் அண்மையில் வெளியிடப்பட்டது.
உணவு வீணடிக்கப்படுவதைத் தவிர்ப்பதற்காக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ள குறும்படம் கோவையில் அண்மையில் வெளியிடப்பட்டது.
உணவுப் பதப்படுத்தும் தொழிலில் ஈடுபட்டுள்ள தனியார் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் சதீஷின் எண்ணத்தில் உருவான மா என்ற பெயரிலான இந்த குறும்படத்தை, பிரதீப் என்பவர் இயக்கியுள்ளார். சுமார் 5 நிமிடங்கள் வரை ஓடக் கூடிய இந்த குறும்படம், உணவுப் பொருளை வீணடிப்பதால் ஏற்படும் தாக்கத்தை மக்களுக்கு எளிதில் விளக்குவதன் மூலம், அதைத் தவிர்ப்பதை ஊக்குவிக்கும் விதமாக அமைந்திருப்பதாக பிரதீப் தெரிவித்துள்ளார்.
இந்த படத்தின் வெளியீட்டு நிகழ்ச்சி கோவையில் அண்மையில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற கோவை இந்திய தொழில் வர்த்தக சபையின் தலைவர் வி.லட்சுமி நாராயணசாமி, குறும்படத்தை யூ டியூபில் வெளியிட்டு, வாழ்த்திப் பேசினார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.