FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

மேலாண்மைத் துறை வகுப்புகள் தொடக்க விழா

கோவை கண்ணம்பாளையம் கலைஞர் கருணாநிதி தொழில்நுட்பக் கல்லூரியில் மேலாண்மைத் துறை வகுப்புகள் தொடக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

30 ஜனவரி 2024, 10:11 pm IST
பகிர்:

கோவை கண்ணம்பாளையம் கலைஞர் கருணாநிதி தொழில்நுட்பக் கல்லூரியில் மேலாண்மைத் துறை வகுப்புகள் தொடக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கல்லூரியின் இயக்குநர் பி.அன்பழகன் தலைமை வகித்தார். முதல்வர் என்.மோகன்தாஸ் காந்தி, துணை முதல்வர் எம்.ரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 
நிகழ்ச்சியில், தனியார் நிறுவனத்தின் மனிதவள மேம்பாட்டுப் பிரிவுத் தலைவர் குரு செல்வராஜ் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார்.
நிகழ்ச்சியில் அவர் பேசும்போது, போட்டி நிறைந்த இன்றைய காலகட்டத்தில் மாணவ-மாணவியர் வேலைவாய்ப்பைப் பெறுவதற்கு தங்களின் தனித் திறன்களை வளர்த்துக் கொள்ள வேண்டும். 
அதேநேரம் வேலையின் காரணமாக ஏற்படும் மன அழுத்தத்தைத் தவிர்ப்பதற்கும் தங்களை தயார்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார். மேலாண்மைத் துறை பேராசிரியர்கள், முதலாம் ஆண்டு மாணவ-மாணவிகள் பலர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments