FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

வ.உ.சி. பிறந்த நாள் விழா: நினைவிடத்தில் மரியாதை

சுதந்திர போராட்ட வீரர் வ.உ.சி.யின் பிறந்தநாளையொட்டி கோவை மத்திய சிறையில் உள்ள அவரது நினைவிடத்தில் பல்வேறு தரப்பினர் மரியாதை செலுத்தினர்.

30 ஜனவரி 2024, 10:11 pm IST
பகிர்:

சுதந்திர போராட்ட வீரர் வ.உ.சி.யின் பிறந்தநாளையொட்டி கோவை மத்திய சிறையில் உள்ள அவரது நினைவிடத்தில் பல்வேறு தரப்பினர் மரியாதை செலுத்தினர்.
இந்திய சுதந்திர போராட்டத்தின் போது கைது செய்யப்பட்ட வ.உ.சிதம்பரனார், கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். அப்போது, ஆங்கிலேயர்கள் அவரை செக்கு இழுக்க வைத்து சித்ரவதை செய்தனர். அவரது நினைவாக சிறை வளாகத்தில் நினைவிடம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த இடத்தில் அகில இந்திய வ.உ.சி. மக்கள் நல இயக்கத் தலைவர் பா.சு.ஆத்மா சிவக்குமார், நிர்வாகிகள் செந்தில்குமார், சரவணகுமார், கமலக்கண்ணன், புஷ்பராஜ், பேராசிரியர் தேவராஜ், சாய்ராம் உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.
இது குறித்து வ.உ.சி. மக்கள் நல இயக்கத் தலைவர் பா.சு.ஆத்மா சிவக்குமார் செய்தியாளர்களிடம் கூறயதாவது: கோவைக்கும், வ.உ.சிக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. கோவையில் தொழிற்சங்கங்கள் வலுப்பெற அவர் முக்கியக் காரணமாக இருந்தார். எனவே, சிறை வளாகத்தில் பொதுப்பணித் துறை சார்பில் வ.உ.சி.க்கு மணிமண்டபம் கட்ட வேண்டும். இதற்கு மக்கள் பங்களிப்பாக ரூ.10 லட்சம் தரத் தயாராக உள்ளோம். 
மேலும், காந்திபுரத்தில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள மேம்பாலத்துக்கு வ.உ.சி. பெயரைச் சூட்ட வேண்டும். இந்தப் பாலம் தொடங்கும் இடத்தில், மத்திய சிறையின் நுழைவாயில் உள்ளது. இந்தச் சிறையில்தான் வ.உ.சி. செக்கிழுத்தார். எனவே, சிறை நுழைவாயில் பகுதியில் வ.உ.சி.யின் முழு உருவ வெண்கலச் சிலை அமைக்க வேண்டும் என்றார்.
இதேபோல, தமிழ்நாடு கலை, இலக்கிய மன்ற மாவட்டச் செயலாளர் ப.பா.ரமணி, துணைத் தலைவர் புருஷோத்தமன், வங்கி ஊழியர்கள் சங்கத் தலைவர் ராஜன், சங்கை சண்முகம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலர் கே.பாலகிருஷ்ணன், இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் மற்றும் பல்வேறு கட்சி, அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் அவர் இழுத்த செக்குக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments