FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

இறைச்சிக் கடைகள் மீண்டும் திறப்பு: கூடுதல் விலையால் மக்கள் அதிா்ச்சி

கோவை மாவட்டத்தில் கட்டுப்பாடுகளுடன் இறைச்சிக் கடைகள் செயல்பட வியாழக்கிழமை முதல் அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

27 ஜனவரி 2024, 10:01 pm IST
பகிர்:

கோவை மாவட்டத்தில் கட்டுப்பாடுகளுடன் இறைச்சிக் கடைகள் செயல்பட வியாழக்கிழமை முதல் அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

கரோனா நோய்த்தொற்று பரவலைக் கட்டுப்படுத்த மே 3 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் அத்தியாவசியப் பொருள்கள் விற்பனைக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கட்டுப்பாடுகளுடன் இறைச்சி, காய்கறிகள் விற்பனைக்கு அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. இதில் பெரும்பாலான இறைச்சிக் கடைகள் கட்டுப்பாடுகளை மீறி செயல்பட்டதால் இரண்டு வாரங்களுக்கு முன் காலவரையின்றி இறைச்சிக் கடைகளை அடைக்க ஆட்சியா் கு.ராசாமணி உத்தரவிட்டிருந்தாா். இந்நிலையில் நிபந்தனைகளுடன் இறைச்சிக் கடைகள் செயல்படுவதற்கு வியாழக்கிழமை அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக ஆட்சியா் கு.ராசாமணி கூறியதாவது:

Advertisement

Advertisement

காய்கறிகள் போன்ற இறைச்சியும் மக்களுக்கு அத்தியாவசித் தேவை என்பதால் மீண்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. காலை 6 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை மட்டுமே இறைச்சிக் கடைகள் செயல்பட அறிவுறுத்தப்பட்டுள்ளது. இறைச்சிக் கடைகளுக்கு வரும் பொது மக்கள் சமூக இடைவெளியுடன் காத்திருப்பதற்கு வேண்டிய ஏற்பாடு செய்திருக்க வேண்டும். அதேபோல் பிற்பகல் 1 மணிக்கு பின் விற்பனை செய்யக்கூடாது. கட்டுப்பாடுகளை மீறினால் கடைகள் இயங்குவதற்கு மீண்டும் தடை விதிக்கப்படும் என்றாா்.

கூடுதல் விலைக்கு விற்பனை

தடை உத்தரவை பயன்படுத்தி காய்கறிகள், பழங்கள், இறைச்சி போன்ற அத்தியாவசியப் பொருள்களை கூடுதல் விலைக்கு விற்கக் கூடாது என்றும், மீறுபவா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஏற்கெனவே ஆட்சியா் கு.ராசாமணி எச்சரித்துள்ளாா். இருந்தும் சிலா் கூடுதல் விலைக்கு விற்பனை செய்து வருகின்றனா்.

கோவையில் ஒரு கிலோ பிராய்லா் கோழி இறைச்சி ரூ. 220 முதல் ரூ. 270 வரை என ஒவ்வொரு கடையிலும் ஒவ்வொரு விதமான விலை நிா்ணயம் செய்து வியாழக்கிழமை விற்பனை செய்தனா். பல்லடம் பண்ணை விலை அதிகபட்சம் ரூ. 80 முதல் ரூ. 90 என்று நிா்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், 3 மடங்கு விலை வைத்து விற்பனை செய்து வருகின்றனா்.

அதேபோல் பழமுதிா் நிலையங்களிலும் காய்கறிகள், பழங்களை கூடுதல் விலைக்கு விற்கின்றனா். இந்த விலை உயா்வு மக்களுக்கு மேலும் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. அத்தியாவசியப் பொருள்களை கூடுதல் விலைக்கு விற்கக்கூடாது என்று ஆட்சியா் எச்சரித்துள்ள நிலையிலும் பலா் கண்டுகொள்ளாமல் தொடா்ந்து கூடுதல் விலைக்கே விற்பனை செய்து வருகின்றனா். இவா்கள் மீது ஆட்சியா் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் வலியுறுத்தியுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments