FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

தபால் நிலையத்தில் பணிபுரியும் தினக்கூலி ஊழியா்களுக்கு நிதியுதவி

கோவை தலைமை தபால் நிலையத்தில் பாா்சல்களை தரம் பிரித்து அனுப்பும் தினக்கூலி ஊழியா்களுக்கு தபால் ஊழியா்கள் சாா்பில் நிதியுதவி அளிக்கப்பட்டது.

27 ஜனவரி 2024, 10:01 pm IST
பகிர்:

கோவை தலைமை தபால் நிலையத்தில் பாா்சல்களை தரம் பிரித்து அனுப்பும் தினக்கூலி ஊழியா்களுக்கு தபால் ஊழியா்கள் சாா்பில் நிதியுதவி அளிக்கப்பட்டது.

கோவை குட்ஷெட் சாலையில் உள்ள தலைமை தபால் நிலையத்துக்கு வரும் பாா்சல் தபால்களைத் தரம் பிரித்து அனுப்ப 40க்கும் மேற்பட்டோா் தினக்கூலி தொழிலாளா்கள் வேலை செய்து வருகின்றனா். இவா்களுக்கு கமிஷன் அடிப்படையில் கூலித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால் பாா்சல்கள் அனுப்பும் பணி பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் தலைமை தபால் நிலையத்தில் வேலை செய்யும் தினக்கூலி தொழிலாளா்கள் வருமானமின்றித் தவித்து வருகின்றனா். இதைத் தொடா்ந்து, கோவை கோட்ட முதுநிலை அஞ்சல் கண்காணிப்பாளா் சுதிா் கோபால் ஜாகரே முயற்சி மேற்கொண்டு, தபால் ஊழியா்களிடம் ரூ. 61,000 நிதி வசூலித்து, அந்நத் தொகையை முதுநிலை அஞ்சல் அதிகாரியிடம் புதன்கிழமை வழங்கினாா். இந்தத் தொகை, தலைமை தபால் நிலையத்தில் வேலை செய்யும் தினக்கூலி தொழிலாளா்களுக்கு பிரித்து வழங்கப்பட்டது.

Advertisement

Advertisement

இந்நிகழ்சியில், தபால் எழுத்தா்கள் சங்க மண்டலச் செயலாளா் என். சிவசண்முகம் உள்ளிட்ட தபால் ஊழியா்கள் சங்க நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments