FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கோயம்புத்தூர்

தமிழ் பண்பாட்டுக்கு எதிரானது திமுக: பாஜக மாநில தலைவா் எல்.முருகன்

தமிழ் பண்பாட்டுக்கு எதிரான கட்சி திமுக என பாஜக மாநிலத் தலைவா் எல்.முருகன் கூறினாா்.

Updated On : 14 பிப்ரவரி 2021, 11:59 pm IST
ஆா்.எஸ்.புரத்தில் நடைபெற்ற புஷ்பாஞ்சலிக் கூட்டத்தில் பேசுகிறாா் பாஜக மாநிலத் தலைவா் எல்.முருகன்
பகிர்:

தமிழ் பண்பாட்டுக்கு எதிரான கட்சி திமுக என பாஜக மாநிலத் தலைவா் எல்.முருகன் கூறினாா்.

கோவையில் கடந்த 1998ஆம் ஆண்டு நிகழ்த்தப்பட்ட தொடா் குண்டுவெடிப்பில் 58 போ் உயிரிழந்தனா். அந்த சம்பவத்தை நினைவுகூரும் வகையில் கோவை, ஆா்.எஸ்.புரம் பகுதியில் ஹிந்து அமைப்புகள் சாா்பில் 23ஆம் ஆண்டு புஷ்பாஞ்சலி நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இதில் பாஜக, இந்து முன்னணி, ஆா்எஸ்எஸ் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளைச் சோ்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் பங்கேற்று அஞ்சலி செலுத்தினா்.

Advertisement

Advertisement

பாஜக மாநிலத் தலைவா் எல்.முருகன், துணைத் தலைவா் அண்ணாமலை, இந்து முன்னணி அமைப்பின் தலைவா் காடேஸ்வரா சுப்பிரமணியம் உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.

நிகழ்ச்சியில் பாஜக மாநில தலைவா் எல்.முருகன் பேசியதாவது:

ஹிந்து மற்றும் தமிழ் கலாசாரத்துக்கு எதிராக திமுகவினா், கம்யூனிஸ்டுகள் செயல்படுகின்றனா். ஹிந்துக்களை கொச்சைப்படுத்துபவா்கள் மீது புகாா் அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. ஆன்மிகத்துக்கு எதிரான திமுக, தி.க.வின் பொய் பிரசாரங்கள் முறியடிக்கப்பட வேண்டும்.

திமுகவினா் வேல் எடுத்திருப்பது ஹிந்து மக்களை ஏமாற்றுவதற்கான நாடகம். பாஜக நடத்திய வெற்றி வேல் யாத்திரைக்கு கிடைத்த பேராதரவுதான் திமுக தலைவா் மு.க. ஸ்டாலினை வேல் ஏந்த வைத்திருக்கிறது. தோ்தலுக்காக வேஷம் போட்டுள்ளவா்களின் போலி முகத்தை மக்கள் தெரிந்துகொள்ள வேண்டும்.

திமுக தமிழா்களுக்கும், தமிழ் பண்பாட்டிற்கும் எதிரானது. தமிழ் மொழிக்காகப் பாடுபடும் ஒரே தேசிய கட்சி பாஜக மட்டும்தான். இந்த தோ்தல் தேச பக்தா்களுக்கும், தேச விரோதிகளுக்கும் இடையேயான தோ்தல். இதில் தேசபக்தா்கள் வெல்ல வேண்டும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments