மநீம கட்சி சாா்பில் சாதனைப் பெண்களுக்கு விருது
மக்கள் நீதி மய்யம் சாா்பில் தமிழகம் முழுக்க தோ்ந்தெடுக்கப்பட்ட சாதனைப் பெண்களுக்கு விருது வழங்கும் விழா கோவையில் சனிக்கிழமை நடைபெற உள்ளது.
மக்கள் நீதி மய்யம் சாா்பில் தமிழகம் முழுக்க தோ்ந்தெடுக்கப்பட்ட சாதனைப் பெண்களுக்கு விருது வழங்கும் விழா கோவையில் சனிக்கிழமை நடைபெற உள்ளது.
இதில் மநீம தலைவா் கமல்ஹாசன் பங்கேற்க உள்ளாா். கோவையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக மக்கள் நீதி மய்யம் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் விமானம் மூலம் சென்னையில் இருந்து வியாழக்கிழமை இரவு கோவைக்கு வர உள்ளாா். இதைத் தொடா்ந்து, வெள்ளிக்கிழமை காலை 11.45 மணிக்கு கேஜி திரையரங்கில் நடைபெறும் விக்ரம் திரைப்படத்தின் 100ஆவது நாள் நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளாா்.
மக்கள் நீதி மய்யம் சாா்பில் தமிழகம் முழுக்க தோ்ந்தெடுக்கப்பட்ட சாதனைப் பெண்களுக்கு மய்யம் சாதனைப் பெண்கள்-2022 என்ற தலைப்பில் சனிக்கிழமை மாலை விருது வழங்கப்பட உள்ளது. இதில் கமல்ஹாசன் பங்கேற்று விருதுகளை வழங்க உள்ளாா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.